தமிழ் செய்திகள்  /  Astrology  /  You Can Know About The History Of Coimbatore Arulmiku Karana Vinayagar Temple Here

HT Yatra: சாலையின் நடுவில் அமர்ந்த விநாயகர்.. கனவில் கதறவிட்ட யானைகள்.. சாலையை வளைத்த ஆங்கிலேயர்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 31, 2024 06:10 AM IST

தமிழ்நாட்டில் அனைத்து மூலை முடுக்குகளிலும் கோயில் கொண்டு விநாயகர் காட்சி கொடுக்கிறார். விநாயகர் வீற்றிருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காரண விநாயகர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில்
அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

எந்த கோயில்களுக்கு சென்றாலும் முதலில் வழங்கக்கூடிய கடவுளாக விநாயகர் அமர்ந்திருப்பார். அவரை வணங்கி விட்டு தான் எந்த கடவுளாக இருந்தாலும் வணங்க வேண்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

அனைத்து கடவுள்களிலும் வித்தியாசமாக விளங்க கூடியவர் விநாயகர். யானை முகம் கொண்டு மனித உடல் அமைப்பு கொண்டு இருக்கக்கூடிய தெய்வமாக விளங்கி வருகின்றார். சக்தியின் பலம் கொண்டு சிவ சொரூபமாக வாழக்கூடியவர் விநாயகர்.

தமிழ்நாட்டில் அனைத்து மூலை முடுக்குகளிலும் கோயில் கொண்டு விநாயகர் காட்சி கொடுக்கிறார். விநாயகர் வீற்றிருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காரண விநாயகர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு

 

ஒரு காலத்தில் மந்தம்பாளையம் ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய ஊரில் விநாயகர் கோயிலை அமைக்க விரும்பியுள்ளனர். இதற்காக ஒரு சிலை செய்து மாட்டு வண்டியில் எடுத்து வந்துள்ளனர். அப்போது மாட்டு வண்டியின் அச்சு முறிந்து விழுந்தது. அந்த இடத்திலேயே விநாயகர் சிலையை கீழே வைத்துவிட்டு இந்த வண்டியை பழுது பார்த்துள்ளனர். வண்டியை சரி செய்துவிட்டு மீண்டும் சிலையை தூக்க முயற்சி செய்யும் பொழுது அங்கிருந்து சிலை வர மறுத்துள்ளது. பலரும் சேர்ந்து கஷ்டப்பட்டு முயற்சி செய்துள்ளனர் அப்போதும் சிலை நிலத்தை விட்டு வரவில்லை. எனவே அங்கே ஒரு சிறு கோயில் அமைத்துள்ளனர்.

அதற்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அந்த வழியை ரோடு அமைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த கோயிலை அகற்றும் படி அந்த ஊர் மக்களிடம் ஆங்கிலேயர்கள் கேட்டுள்ளனர். அந்த பகுதி மக்கள் கோயிலை அகற்றுவதற்கு மறுத்துள்ளனர். இதனால் ஆங்கிலேயர்கள் நாங்களே அந்த கோயிலை அகற்றுகிறோம் எனக் கூறியுள்ளனர்.

அன்றைய தினம் ஆங்கிலேய அதிகாரியின் கனவில் பல யானைகள் அவரை விரட்டுவது போல தோன்றியுள்ளது. உடனே அந்த ஆங்கிலேய உயர் அதிகாரி கோயிலை விட்டு சாலையை வளைவாக போடும்படி உத்தரவிட்டுள்ளார். இன்று வரை அந்த வளைவான பாதை இருப்பதை அங்கு சென்றால் நம்மால் காண முடியும்.

தலத்தின் பெருமை

 

இங்குள்ள காரணம் விநாயகர் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கோயில் எனக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் எந்த காரணத்திற்காக அமர்ந்தார் என தெரியவில்லை அதனால் இவர் காரண விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும் இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பசு மற்றும் காளைகளோடு தங்களது விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் வளர்க்கும் கால்நடைகளின் நன்மைக்காக சிவபெருமானின் வாகனமாக விளங்கக்கூடிய நந்தியம்பெருமானை விநாயகரின் அருகில் சிலையாக வைத்துள்ளனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் அமர்ந்திருப்பது மிகப்பெரிய சிறப்பாகும்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்தம்பாளையம் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் வாகன வசதிகள் உள்ளன.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel