தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பீமன் வழிபட்ட பீமேஸ்வரர்.. ராகுவை தலையில் கொட்டிய விஷ்ணு.. சூரிய ஒளியின் மிளிறும் சிவபெருமான்

HT Yatra: பீமன் வழிபட்ட பீமேஸ்வரர்.. ராகுவை தலையில் கொட்டிய விஷ்ணு.. சூரிய ஒளியின் மிளிறும் சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2024 06:40 AM IST

HT Yatra: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் திரும்பும் இடமெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன வெண்மணி ஊரில் அமைந்துள்ள அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்.

பீமன் வழிபட்ட பீமேஸ்வரர்.. ராகுவை தலையில் கொட்டிய விஷ்ணு.. சூரிய ஒளியின் மிளிறும் சிவபெருமான்
பீமன் வழிபட்ட பீமேஸ்வரர்.. ராகுவை தலையில் கொட்டிய விஷ்ணு.. சூரிய ஒளியின் மிளிறும் சிவபெருமான்

HT Yatra: சிவபெருமானுக்கு இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. பல கடவுள்களுக்கு பல அவதாரத்தில் கோயில்கள் அமைக்கப்பட்டாலும் லிங்கு திருமேனியாக உருவமில்லாமல் சிவபெருமான் அனைத்து கோயில்களிலும் காட்சிப்படுத்து வருகிறார்.

குறிப்பாக மன்னர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைத்து மக்களுக்குமான கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். பல்வேறு விதமான வரலாறுகளை தாங்கிக்கொண்டு எத்தனையோ கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாமல் கம்பீரமாக நின்று வருகிறது.

மண்ணுக்காக போரிட்ட மன்னர்கள் கூட சிவபெருமானின் பக்தர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக சோழர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அப்படிப்பட்ட தோழர்கள் சிவபெருமானுக்கு கோயில் கட்டுவதை தன்னுடைய தொழிலாக வைத்து வந்துள்ளனர். எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் திரும்பும் இடமெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன வெண்மணி ஊரில் அமைந்துள்ள அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் மூலவர் கிழக்கு பக்கம் பார்த்தபடி காட்சி கொடுத்து வருகிறார். புரட்டாசி மாதத்தில் பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், அதற்கு பின்பு இரண்டு நாளும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரத்திற்கு இரண்டு நாட்கள் முன்னும், இரண்டு நாட்களுக்கு பின்னும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது நேரடியாக படுகின்றது. இது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு இந்த கோயில்களின் சிற்ப வேலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். கோயிலின் இடதுபுறம் அம்பிகையான ஆனந்தவல்லி காட்சி கொடுத்து வருகிறார். மேலும் இடதுபுறத்தில் குபேர லிங்கம் இருக்கின்றது.

நவகிரகங்கள் மற்ற கோயில்களோடு ஒப்பிடும்போது இங்கு சற்று வித்தியாசமாக இருக்கும். நவகிரகங்களில் இருக்கக்கூடிய சூரிய பகவான் எப்போதும் கிழக்கு முகத்தில் காட்சி கொடுத்து வருவார் ஆனால் இந்த கோயிலில் மேற்கு பக்கம் பார்த்தபடி காட்சி கொடுத்து வருகிறார். அம்பாளுக்கு ஒளி வீசும் அளவிற்கு சூரிய பகவான் மேற்கு நோக்கி காட்சி கொடுத்து வருகிறார்.

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ள தகவல்கள் கிடைக்க வேண்டும் என்றால் இங்கு வழிபட்டால் அது நிவர்த்தி அடையும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு

பஞ்சபாண்டவர்கள் 12 ஆண்டு காலம் வனவாசத்தை அனுபவித்தனர். அவர்களில் ஒருவரான பீமன் பூஜித்த தலமாக இந்த தலம் விளங்கி வருகிறது. இந்த கோயில் பாண்டிய காலத்தில் வடிவமைக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோயிலை சுற்றி நான்கு புறங்களிலும் பல சிவன் கோயில்கள் உள்ளன.

வடக்கு பக்கத்தில் குந்தி தேவியால் பூஜிக்கப்பட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வடகிழக்கு பக்கத்தில் தர்மரால் வழிபாடு செய்யப்பட்ட தர்மேஸ்வரர் கோயில் உள்ளது. தெற்கு பக்கத்தில் பெரிய வெண்மணி என்ற பகுதியில் விஜய ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நாகமலை என்ற கிராமத்தில் நகுல நாள் வழிபாடு செய்யப்பட்ட நகுலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சகா தேவனால் பூஜிக்கப்பட்ட சகாதேஸ்வரர் திருக்கோயில் தேவனூரில் அமைந்துள்ளது. அதேபோல சின்ன பெண்மணி பகுதியில் இந்த பீமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

அனைத்து கோயில்களுடன் ஒப்பிடும்போது இந்த திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவலிங்கத்தின் மீது ஐந்து தலை நாகம் காணப்படும். பாற்கடலை கடையும் பொழுது அமுதம் பெறுவதற்காக ராகு பகவான் இடம் மாறி தேவர்களுடன் அமர்ந்தார். இதனை அறிந்த மகாவிஷ்ணு அவரது தலையில் கொட்டினார். அப்போது ஒருதலையாக இருந்த அவருடைய தலை ஐந்து தலை நாகமாக உருவெடுத்தது.

அப்போது சூரியன் மற்றும் சந்திரன் இவை இரண்டையும் நான் விழுங்கி விடுவேன் என சபதம் எடுத்துள்ளார். அப்படி செய்தால் உலகம் இருண்டு விடும் இடம் மகாவிஷ்ணு நினைத்துள்ளார். உடனே அதனை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் காரணமாகவே சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் உருவானதாக இந்த கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9