தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. விமோசனம் கொடுத்த கைலாசநாதர்

HT Yatra: பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. விமோசனம் கொடுத்த கைலாசநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 30, 2024 06:00 AM IST

HT Yatra: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரமனூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் என அழைக்கப்படுகிறார் தாயார் காமாட்சி அம்மனாக விளங்கி வருகிறார். கோயிலின் தலவிருட்சம் வில்வமரம்.

பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. விமோசனம் கொடுத்த கைலாசநாதர்
பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. விமோசனம் கொடுத்த கைலாசநாதர்

HT Yatra: உலகம் முழுவதும் கோயில் கொண்டு தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் இவர் தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியில் அனைவருக்கும் காட்சி கொடுத்து வருகிறார். ஆதி முதல் அந்தமமாக விளங்கக்கூடிய கடவுளாக சிவபெருமான் இருந்து வருகிறார்.

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மிகப்பெரிய கோயில்கள் கட்டப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மக்களுக்குமான கடவுளாகவும் அனைத்து கடவுள்களுக்கும் கடவுளாகவும் சிவபெருமான் விளங்கி வருகின்றார்.

மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். குறிப்பாக சோழர்களின் ஆஸ்தான கடவுளாகவும் சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த மிகப்பெரிய மன்னனான ராஜராஜசோழன் தீவிர சிவ பக்தனாக இருந்து வந்துள்ளார் அதனை பறைசாற்றும் விதமாக உலகமே வியக்கும் அளவிற்கு தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை ராஜராஜ சோழன் கட்டியுள்ளார். இதுபோல எத்தனையோ வரலாறுகளைக் கொண்டு திரும்பும் திசை எல்லாம் தமிழ்நாட்டில் கோயில்கள் அமைக்கப்பட்ட சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரமனூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் என அழைக்கப்படுகிறார் தாயார் காமாட்சி அம்மனாக விளங்கி வருகிறார். கோயிலின் தலவிருட்சம் வில்வமரம்.

தல சிறப்பு

இந்த கோயிலில் இருக்கக்கூடிய கைலாசநாதர் வழிபட்டால் செய்வினை கோளாறுகள் பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த கோயிலில் மிகவும் சிறப்பாக ஆறடி உயரத்தில் சூரிய பகவான் காட்சி அளித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று சூரிய பகவானுக்கு செவ்வரளி மாலை மற்றும் சிவப்பு வஸ்திரம் அணிவித்து, கோதுமை பாயாசம் செய்து நெய் வைத்தியம் படைத்து வழிபட்டால் சகல துன்பங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தல வரலாறு

சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்த பொழுது அவரது திருமுடி மற்றும் திருவடியை காண்பதற்காக விஷ்ணு பகவான், பிரம்மதேவர் இருவரும் போட்டியிட்டனர். பிரம்மதேவர் தாழம்பூவின் துணையைக் கொண்டு இறைவனின் திருமுடியை கண்டதாக பொய் கூறினார். இதனால் சிவபெருமான் கோபம் கொண்டு சாபம் பெற்றுள்ளார்.

அதற்குப் பிறகு தனது தவறை பிரம்மதேவர் உணர்ந்தார். சிவபெருமான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை மறுபடியும் வேண்டியுள்ளார். இதுகுறித்து வழி கெட்ட பொழுது பூலோகம் சென்று தன்னை வழிபட்டால் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூறியுள்ளார்.

அதேபோல பூலோகம் வந்து பிரம்மதேவர் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் லிங்கம் ஒன்றை அமைத்து பிரதிஷ்டை செய்து சிவபூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அதற்கு பின்னர் பிரம்மதேவர் சாப விமோசனம் பெற்றார்.

சாப விமோசனம் பெற்ற பிரம்மதேவர் சிவபெருமானுக்கு நன்றி தெரிவித்தார். அதன் காரணமாக வரும் காலங்களில் இந்த ஊர் எனது பெயரில் அழைக்கப்பட வேண்டும் என சிவபெருமானிடம் கோரிக்கை விடுத்தார். அதேபோல் ஆகட்டும் என சிவபெருமான் ஆசிர்வாதம் செய்தார். அதன் காரணமாகவே இந்த ஊர் பிரம்மனூர் என அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கக்கூடிய மூலவர் விமானம் பாண்டியர் கால கலை அம்சத்தின் கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9