Monday Temple: பேச்சைக் கேட்காத பார்வதி தேவி.. சாபம் கொடுத்த சிவபெருமான்.. உடலில் இடம் கொடுத்த சாம்பமூர்த்தீஸ்வரர்
Monday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீசி இருக்க கூடிய சிவபெருமான் சாம்பமூர்த்தீஸ்வரர் எனவும் தாயார் மனோன்மணி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Monday Temple: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். மன்னர்கள் காலத்தில் சிவபெருமானை குலதெய்வமாக அனைத்து மன்னர்களும் வணங்கி வந்துள்ளன. மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் சிவபெருமானை வணங்குவதில் அனைவரும் ஒற்றுமையாக திகழ்ந்து வந்துள்ளன.
ஒரு பக்கம் போர் நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வரலாற்றுச் சரித்திர குறியீடாக நின்று வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீசி இருக்க கூடிய சிவபெருமான் சாம்பமூர்த்தீஸ்வரர் எனவும் தாயார் மனோன்மணி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
கருவறையில் மூலவர் சாம்பமூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்து வருகிறார். சூரிய பகவான் பூஜை செய்யும் திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாக விளங்கி வருகிறது மாசி மாதத்தில் முதல் வாரத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருக பெருமான் மூன்று முகத்தோடு காட்சி கொடுப்பது மிகப்பெரிய சிறப்பாகும். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், தீரா நோய்கள், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த திருக்கோயிலில் காட்சி கொடுத்து வரக்கூடிய சதுர்வேத லிங்கங்களை வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
பார்வதி தேவியாரின் தந்தை தட்சன். இவர் ஒரு முறை சிவபெருமானை புறக்கணித்துவிட்டு யாகம் ஒன்று நடத்தியுள்ளார். சிவபெருமானுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை அவர் கொடுக்க மறுத்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன. அந்த சமயத்தில் சிவபெருமான் தட்சன் யாகத்திற்கு செல்லக்கூடாது என பார்வதி தேவாரிடம் கூறியுள்ளார்.
தந்தையின் யாகத்திற்கு செல்ல முடியாமல் பார்வதி தேவியார் தவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிவபெருமானின் பேச்சை மீறி பார்வதி தேவியார் தட்சனின் யாகத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த சிவபெருமான் என்னோடு நீ பிரிந்து வாழ வேண்டும் என சாபம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் சக்தியைப் பிரிந்த காரணத்தினால் சிவபெருமான் தனியாக வந்து லிங்க வடிவில் இங்கு இருக்கக்கூடிய வில்வ மரத்தடியில் அமர்ந்துள்ளார். சிவபெருமானை தேடி பார்வதி தேவியார் அனைத்து லோகங்களிலும் சுற்றித் திறந்து உள்ளார்.
இதனால் ஆழ்ந்த துயரத்தில் பார்வதி தேவியார் ஆழ்ந்துள்ளார். அதன் பின்னர் பூலோகத்தில் வில்வ மரத்தடியின் கீழ் லிங்கத் திருமேனியாக நான் அமர்ந்திருக்கிறேன் என சிவபெருமான் அசரீரியாக பார்வதி தேவாரிடம் கூறியுள்ளார். என்னை காண வேண்டுமென்றால் சூரியன் போல் என்னை வழிபாடு செய்யலாம் என கூறியுள்ளார்.
அதன் பின்னர் பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்டதாகவும் சிவபெருமான் பார்வதி தேவியை மன்னித்து தனது உடலில் இடம் கொடுத்து சரிபாதையாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வில்வ மரத்தடியில் லிங்க திருமனையாக காட்சி கொடுத்த சிவபெருமானை மைசூர் மகாராஜாவின் அமைச்சர் எடுத்து கோயில் அமைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9