HT Yatra: இறந்து போன குழந்தை.. கனவில் வந்த சிவபெருமான்.. பாதச்சுவடுகளாக பதிந்த பரமசிவன்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: இறந்து போன குழந்தை.. கனவில் வந்த சிவபெருமான்.. பாதச்சுவடுகளாக பதிந்த பரமசிவன்

HT Yatra: இறந்து போன குழந்தை.. கனவில் வந்த சிவபெருமான்.. பாதச்சுவடுகளாக பதிந்த பரமசிவன்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 06:00 AM IST

Arulmigu Paramasivan temple: கடவுளுக்கெல்லாம் கடவுளாக போற்றப்படும் சிவபெருமான் பல்வேறு சிறப்புமிக்க கோயில்களில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார் அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூர் அருள்மிகு பரமசிவன் திருக்கோயில்.

இறந்து போன குழந்தை.. கனவில் வந்த சிவபெருமான்.. பாதச்சுவடுகளாக பதிந்த பரமசிவன்
இறந்து போன குழந்தை.. கனவில் வந்த சிவபெருமான்.. பாதச்சுவடுகளாக பதிந்த பரமசிவன்

இது போன்ற போட்டோக்கள்

தேனி, போடிநாயக்கனூர், அருள்மிகு பரமசிவன் திருக்கோயில், சிவபெருமான், ஆன்மீக சுற்றுலா, பரமசிவன்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

HT Yatra: உலகமெங்கும் தனித்துவமான தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் மன்னர்கள் காலம் தொடங்கி தற்போது வரை சிவபெருமானுக்கென மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனியில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு என மிகப் பெரிய கூட்டம் இருந்து வருகிறது திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் கண் பார்வை படும் இடம் எல்லாம் சிவபெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன மன்னர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார் சிவபெருமானுக்கு கோயில் எழுப்புவதோடு மட்டுமல்லாமல் தங்களது கலை திறனையும் சிற்பங்களாக செதுக்கி வரலாறு கடந்து கலையோடு சிவபெருமான் வாழ்ந்து வருகிறார்.

கடவுளுக்கெல்லாம் கடவுளாக போற்றப்படும் சிவபெருமான் பல்வேறு சிறப்புமிக்க கோவில்களில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார் அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூர் அருள்மிகு பரமசிவன் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் சிவபெருமானுக்கு வலது புறத்தில் லட்சுமி நரசிம்மரும், இடது பக்கத்தில் வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமானும் காட்சி கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மழை அடிவாரத்தில் பாலகணபதி காட்சி கொடுத்து வருகிறார். இது இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும்.

குழந்தை இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தொழில் விருத்தி, ஐஸ்வர்ய பெருக்கம், கால்நடை சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்தும் இங்கே நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தல வரலாறு

சிவ பக்தர் ஒருவர் ஒரு காலத்தில் இந்த பகுதியில் வசித்து வந்துள்ளார். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் குழந்தை வரம் வேண்டி காசி ராமேஸ்வரம் என அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார். இறைவனின் அருளால் இவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. இருப்பினும் குழந்தையாக இருக்கும் பொழுது நோய் ஏற்பட்ட அந்த குழந்தை இறந்து விடுகிறது.

இறைவன் மேல் கோபம் கொண்ட அந்த சிவ பக்தர் தன்னிடம் இருந்த பூஜை பொருட்களை ஆற்றில் போட்டு விடலாம் என முடிவு செய்து படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவரது கனவில் இந்த ஊருக்கு எல்லையில் மேற்கே உள்ள மலையின் உச்சியில் இருக்கக்கூடிய துறவியிடம் இறந்து போன குழந்தை இருப்பது போல் தோன்றியுள்ளது. அந்த குழந்தையை தந்தையார் அழைக்கும் பொழுது அது வராமல் துறவி இடமே இருந்துள்ளது.

எனது மகனை என்னிடம் கொடுத்து விடுங்கள் என அந்த துறவி இடம் சிவ பக்தர் கேட்டுள்ளார். உடனே அந்த துறவி இந்த குழந்தை எனக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளது. அவனைப் போன்று உனக்கு மற்றொரு குழந்தை பிறப்பான் எனக்கு கூறியுள்ளார் துறவி.

எனது குழந்தையை சேவைக்காக எடுத்துக் கொண்ட நீங்கள் யார் என அந்த துறவி இடம் சிவ பக்தர் கேட்டுள்ளார். அப்போது கூவலிங்கன் மலையில் நட்சத்திர வடிவில் ஜோதி தோன்றியுள்ளது. துறவியின் வடிவில் இருந்த பரமசிவன் பார்வதி தேவி யாரோடு சிவ பக்தருக்கு காட்சி கொடுத்துள்ளார்.

உடனே உறக்கத்திலிருந்து எழுந்த சிவ பக்தர் நடந்த அனைத்தையும் ஊர் மக்களிடம் காலை நேரத்தில் சென்று கூறியுள்ளார். உடனே அனைவரும் அந்த மலை பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்தால் இருவரின் பாத சுவடுகளும் அதை சுற்றி மலர்களும் இருந்துள்ளது. இதை கண்டு ஊர் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் உடனே அங்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்துள்ளனர். அதுதான் போடிநாயக்கனூர் அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner