தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: ஏழையின் துணியை வாங்கிய சிவபெருமான்.. குழந்தை மூலம் அறிவுரை.. லிங்கத்தில் பொறிக்கப்பட்ட 1008 லிங்கங்கள்

HT Yatra: ஏழையின் துணியை வாங்கிய சிவபெருமான்.. குழந்தை மூலம் அறிவுரை.. லிங்கத்தில் பொறிக்கப்பட்ட 1008 லிங்கங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 06:00 AM IST

Arulmigu Arudra Kabaliswarar Temple: இன்று வரை உலகம் முழுவதும் பாராட்டக்கூடிய தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்குச் சான்றாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்.

ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்
ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்

எத்தனையோ கதைகள் இருந்தாலும் தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத்திருமேனியில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமான் கோயில்கள் இருப்பது மிகப்பெரிய சிறப்பாகும். அத்தனை கோயில்களும் தனக்கென சிறப்பு வரலாறுகளைக் கொண்டு வரலாற்று கூறி விடாத நின்று வருகிறது.

சோழர்களின் குலதெய்வமாக சிவபெருமான் திகழ்ந்து வந்துள்ளார். இன்று வரை உலகம் முழுவதும் பாராட்டக்கூடிய தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்குச் சான்றாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்.

குழந்தை பாக்கியம், திருமண தடை, கல்வியில் சிறந்து விளங்குதல், தொழில் விருத்தி உள்ளிட்டவைகளுக்கு இந்த இறைவன் அருள் பாலித்த வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தல பெருமை

இந்த திருக்கோவிலூர் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் இருக்கக்கூடிய லிங்கத்தின் 1008 சிவலிங்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் இந்த லிங்கு திருமேனியில் மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுவது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

தல வரலாறு

 

இந்த கபாலீஸ்வரர் திருக்கோயிலில் லட்சுமி காந்தன் என்ற மன்னன் கட்டியதாக கூறப்படுகிறது. வேள்வி நடத்துவதற்காக பால்குடங்களில் எடுத்துச் சென்ற பொழுது கீழே வைக்கப்பட்டதும் பால்குடங்கள் தானாக கவிழ்ந்து விழுந்துள்ளன. பால் ஓரிடத்தில் சென்று ஒன்று சேர அந்த இடத்தை தோண்டி பார்த்த பொழுது திடீரென மண்வெட்டி பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. உள்ளே பார்த்த பொழுது லிங்கத் திருமேனியா இறைவன் காட்சி கொடுத்துள்ளார் அதற்கு பிறகு அங்கே மன்னன் கோயில் கட்டியதாக கூறப்படுகிறது.

கொங்கு நாட்டை ஆண்டு வந்த கரிகாற் சோழன் இந்த கோயிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது. அவர் கட்டியும் 36 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.

இந்த இடத்தில் ஆருத்ரா கபாலன் என்ற அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய தீய செயல்கள் தாங்க முடியாமல் சிவபெருமான் அவரை வதம் செய்துள்ளார். உயிர் போகும் தருவாயில் நீங்கள் வீற்றிருக்கக்கூடிய இந்த தளத்திற்கு எனது பெயரை வைக்க வேண்டும் என சிவபெருமானிடம் அவர் வேண்டி கேட்டுள்ளார். ஆருத்ரா கபாலனின் வேண்டுகோளை ஏற்று இறைவனுக்கு ஆருத்ரா கபாலீஸ்வரர் என பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தனது பரம பக்தனான ஏழை நெசவுத் தொழிலாளிக்கு காட்சி கொடுப்பதற்காக சிவபெருமான் முதியவராக உருவெடுத்து அவரிடம் இருந்து ஒரு துண்டைக் யாசகமாக பெற்றுச் சென்றுள்ளார். நெசவு தொழிலாளி கடனாக வாங்கி கொடுத்த துண்டை பெற்றுச் சென்றார் சிவபெருமான். மறுநாள் அர்ச்சகர் கோயில் திறந்து பார்க்கும் பொழுது வழக்கம் போல அலங்காரத்தில் இல்லாமல் நெசவு தொழிலாளி கொடுத்த துண்டை தனது லிங்கத்தில் கட்டியபடி காட்சி கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சடைந்த மக்கள் இந்த தொண்டைக் கொடுத்தது நெசவுத் தொழிலாளி தாண்டவம் தான் என அவருக்கு தொண்டை கடனாக கொடுத்த உரிமையாளர் கூறியுள்ளார். 

ஊர் மக்கள் தாண்டவனைச் கேட்ட பொழுது அவர் கூறியது உண்மைதான் எனும் சொல்லியும் மக்கள் அனைவரும் அவரை கட்டிவைத்து பொய் என கூறி அடித்துள்ளனர். ஒரு சிறு குழந்தையின் உடலில் சிவபெருமான் பிரவேசம் செய்து தாண்டவனை காப்பாற்றியதாக தல வரலாறு கூறுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel