HT Yatra: பக்தருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த பாணலிங்கம்.. ஒளியாக மாறிய அண்ணாமலையார்
HT Yatra: எத்தனையோ கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் கம்பீரமாக காலம் கடந்து நின்று வருகின்றன அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்.

HT Yatra: உலகம் முழுவதும் தனக்கென பக்தர்கள் கூட்டத்தை கொண்டு இருந்தாலும் சிவபெருமானுக்கு இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு இந்தியாவில் வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Apr 22, 2025 04:14 PMகொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
Apr 22, 2025 03:17 PMகன்னி டூ சிம்மம்.. மே 18 -ல் நடக்க இருக்கும் கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 2 ராசிகள் யார் யார்?
Apr 22, 2025 02:04 PMஉருவான சதுர்கிரஹி யோகம்! தொழில் வளர்ச்சி, பணவரவு.. அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சியில் இருக்க போகும் ராசிகள்
Apr 22, 2025 01:52 PMதுலாம் முதல் மீனம் ராசியினர் வரை.. அட்சய திருதியையில் செய்ய வேண்டிய தானம் என்ன?.. வாங்க வேண்டிய பொருள்கள் எவை?
Apr 22, 2025 01:28 PMராகு பகவான் எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறார் பாருங்க.. செல்வமும் வாய்ப்பும் கைகூடும் யோகம் யாருக்கு!
Apr 22, 2025 01:12 PMராகு பெயர்ச்சி பலன்கள்: கோடி கோடியாய் கொட்ட வருகிறார் ராகு.. பண மழை ராசிகள்.. உங்க ராசி இதுதான் போல!
இமயமலை சிவபெருமானின் இடமாக கருதப்பட்டு இன்றுவரை உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர். பழங்காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது மன்னர்கள் காலத்தில் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயத்தையும் இறைவன் மீது வைத்திருக்கக்கூடிய பக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவே கோயில்களை கற்றுத் தங்களது போர்களை செய்து வந்துள்ளனர்..
மிகப்பெரிய கம்பீரமான கோயில்களை கட்டி போட்டி போட்டு தங்களது பக்தியை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அப்படிப்பட்ட எத்தனையோ கோயில்கள் இந்தியாவில் இருந்தாலும் குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. களத்தில் அழிக்க முடியாமல் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மிகப்பெரிய சோழனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை அதற்கு சாட்சியாக நின்று வருகிறது.
இதுபோல எத்தனையோ கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் கம்பீரமாக காலம் கடந்து நின்று வருகின்றன அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் அண்ணாமலையார் எனவும் தாயார் உண்ணாமுலை அம்மன் எனவும் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய பாணலிங்கம் காசியில் இருந்து எடுத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மிருகப் பெருமான் மயில்மீது அமர்ந்து காட்சி கொடுத்து வருகிறார் வள்ளி மற்றும் தெய்வானை இருவரும் யானை மீது அமர்ந்திருந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர் இந்த காட்சி வேறு எங்கும் கிடைக்காத காட்சியாக கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் வீற்றிருக்கக்கூடிய அண்ணாமலையார் போலவே இங்கும் கார்த்திகை தீப தினத்தன்று விளக்கேற்றி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சைவம் மற்றும் வைணவம் வேதம் காட்டாமல் இந்த திருக்கோயிலில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இவர்கள் இருவரோடும் தனி சன்னதியில் காட்சி கொடுத்து வருகிறார்.
தல புராணம்
முன்பு இந்த பகுதியில் அதாவது 400 ஆண்டுகளுக்கு முன்பு சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திருவண்ணாமலையில் வீற்றிருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரரின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஆண்டுதோறும் திருவண்ணாமலை சென்று கார்த்திகை தீபத்தை இவர் கண்டு வந்துள்ளார். வயது முதிர்ந்ததும் இவரால் திருவண்ணாமலைக்கு செல்ல முடியவில்லை.
வருத்தத்துள் கண்ணீர் விட்டு அல்லது சிவபெருமானை நோக்கி வேண்டியுள்ளார். உடனே சிவபெருமான் இவருக்கு ஜோதி ரூபமாக காட்சி கொடுத்துள்ளார். உடனே உனக்கு கிடைத்த லிங்கத்தை வைத்து இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்தால் திருவண்ணாமலையில் கிடைக்கக்கூடிய பலன்கள் அனைத்தும் உனக்கு கிடைக்கும் என அசரீரி ஒன்று கேட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அந்த பக்தர் தனது நண்பர்களின் மூலம் காசியில் இருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். அது முதல் இந்த கோயிலில் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய திருக்கார்த்திகை தீப திருநாள் போலவே இங்கும் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அதுதான் நாம் தற்போது காணக்கூடிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
