தமிழ் செய்திகள்  /  Astrology  /  You Can Find Out About The Zodiac Sign People Who Are Going To Be Troubled By Lord Mars

Lord Mars: செவ்வாய் மிரட்டும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 14, 2024 02:33 PM IST

செவ்வாய் பகவானால் சிரமப்பட போகும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்கிறார்கள் அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் நுழைந்தார். இதனுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனம் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனமாக இருங்கள்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். சில நேரங்களில் கவனமாக இருப்பது நல்லது இல்லை என்றால் மோசமான சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி

 

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலையை உருவாகப் போகின்றது. வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவு மிகவும் அவசியமாகும்.

மகர ராசி

 

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் பகவான் தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டார். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.