அசுரனிடம் மூன்று லிங்கம்.. வாயில் கடித்து பூஜை செய்த கரண்.. அருள் புரிந்த கடுத்துருத்தி மகாதேவர்
Kaduthuruthy Mahadeva: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருத்தி மகாதேவர் திருக்கோயில். இந்த கோயிலை கடுத்துருத்தி சிவன் கோயில் எனவும் கூறுகின்றனர்.
Kaduthuruthy Mahadeva: கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. குறிப்பாக இந்தியாவில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர். அன்று வரை இன்று தொடங்கி சிவபெருமானின் அடிமையாக எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர்.
பல மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் மண்ணுக்காக பல போர்களை செய்து வந்தாலும் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
காலத்தால் அழிக்க முடியாத களஞ்சியமாக அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. கோயிலின் கட்டுமானங்கள் பல ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினால் அது மிகை ஆகாது. சோழர்களின் மகாராஜனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் மிகப்பெரிய சான்றாக திகழ்ந்து வருகிறது.
மறுபுறம் பாண்டிய மன்னர்கள் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சிவபெருமானை போற்றி புகழ்ந்து பாடி வந்துள்ளனர். இது போன்ற கோயில்கள் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் இருக்கின்றனர். இருப்பினும் செல்லும் இடமெல்லாம் மன்னர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
இன்று வரை பல நாடுகளில் சிவபெருமான் கோயில் கொண்டு காட்சியளிப்பது மன்னர்களின் பக்தி தான் என கூறினால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருத்தி மகாதேவர் திருக்கோயில். இந்த கோயிலை கடுத்துருத்தி சிவன் கோயில் எனவும் கூறுகின்றனர்.
தல சிறப்பு
கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான சிவபெருமான் கோயில்களில் மூலஸ்தானத்தில் சிவன் மட்டும் காட்சியளிப்பது வழக்கம். அது கேரள மாநிலத்தில் மட்டுமல்ல அனைத்து கோயில்களிலும் சிவபெருமான் மட்டும் மூலஸ்தானத்தில் காட்சி அளிப்பார்.
அம்மன் தனி சன்னதி கொண்டு காட்சியளிப்பார். அதன் காரணமாகவே அந்த கோயில்களில் கர்ப்ப கிரகத்தை இடமிருந்து சுற்றும் போது கோமூகி வரை சென்று பின்னர் அதே வழியில் வந்து சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்பின்னர் வலது புறம் சென்று கோமுகியை வணங்கிவிட்டு அதன் பின்னே வெளிவருவார்கள். ஏனென்றால் அம்மன் தனி சன்னதியில் காட்சி கொடுப்பார். சிவபெருமானின் தலையில் இருக்கக்கூடிய கங்கை அபிஷேக தீர்த்தமாக பூமிக்கு வழியாக வந்து கொண்டிருக்கும் அதனை நாம் தாண்டக்கூடாது என்பது தான் ஐதீகம்.
ஆனால் கோட்டயத்தில் இருக்கக்கூடிய இந்த கடுத்துருத்தி மகாதேவர் திருக்கோயிலில் மூலஸ்தானத்தில் சிவபெருமான் மற்றும் அம்மன் இருவரும் சேர்ந்து கோலமாக காட்சி கொடுத்து வருகின்றனர். இது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.
தல வரலாறு
முன்பு ஒரு காலத்தில் கரண் என்று அசுரன் மோட்சம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக சிதம்பரத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானின் நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டு வந்துள்ளார். இவருடைய தவத்தை கண்டு சிவபெருமான் மகிழ்ந்துள்ளார். அதன் பின்னர் சிவபெருமான் கரணுக்கு மூன்று லிங்கத்தை கொடுத்து தெற்கு திசையில் இதனை வைத்து பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
சிவபெருமானின் ஆணைக்கிணங்க மூன்று லிங்கத்தையும் எடுத்து வர கரண் என்று அசுரன் முடிவு செய்தார். வலது கையில் ஒரு லிங்கத்தையும், இடது கையில் ஒரு லிங்கத்தையும் எடுத்துவிட்டார். மூன்றாவது லிங்கத்தை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் மூன்றாவது லிங்கத்தை வாயில் கடித்து இறுத்திக் கொண்டார்.
அவ்வாறு கரண் பிரதிஷ்டை செய்த காரணத்தினால் இந்த தலம் கடித்துருத்தி என அழைக்கப்பட்டது அதன் பின்னர் காலப்போக்கில் கடுத்துருத்தி என மாறபட்டது. அதன் பின்னர் கரண் தனது வலது கையில் வைத்திருந்த லிங்கத்தை வியாக்கரபாதம் மகரிஷி இடம் கொடுத்து வைக்கதில் பிரதிஷ்டை செய்ய சொல்லி கூறினார். இடது கையில் வைத்திருந்த லிங்கத்தை ஏற்றுமானூர் கோயிலில் கொடுத்த பிரதிஷ்டை செய்யும்படி கூறினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.