Maha Shivratri 2025: மகிமைகள் கிடைக்குமா?.. யோகம் தரும் மகா சிவராத்திரி.. இந்த 2025 ஆம் ஆண்டு சிவராத்திரி எப்போது?
Maha Shivratri 2025: மகா சிவராத்திரி திருநாளில் மக்கள் நினைக்கக்கூடிய வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருநாள் எப்போது கொண்டாடப்படும் என்பது குறித்து இங்கு காணலாம்.

Maha Shivratri 2025: தேவர்களின் கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமான் அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய கடவுளாக திகழ்ந்து வருகின்றார். எப்போதும் தனது பக்தர்களுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை கொடுக்கக்கூடிய மகாதேவர் தான் சிவபெருமான். அவர் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறக்கூடிய திருநாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகிறது.
இந்த மகா சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை வழிபட்டால் அனைத்து யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மகா சிவராத்திரி திருநாளில் மக்கள் நினைக்கக்கூடிய வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருநாள் எப்போது கொண்டாடப்படும் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மகா சிவராத்திரி
- நமது இந்து நாட்காட்டி படி மகா சிவராத்திரி திருநாள் பால்குணமாக கிருஷ்ண பஷ சதுர்த்தி திருநாளில் கொண்டாடப்படுகிறது. சதுர்தசி திதி நாளானது வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி திகதி காலை 11.08 மணிக்கு தொடங்குகிறது. அதற்குப் பிறகு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று காலை 8.54 மணிக்கு முடிவடைகிறது.
- அந்த வகையில் உதய திதியை அடிப்படையாகக் கொண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய திருநாளின் இரவு நேரத்தில் சிவசக்தி வழிபாடு மிகவும் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி பூஜை
- பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று மகாசிவராத்திரி திருநாளில் மாலை 6.9 மணி முதல் இரவு 9.26 மணி வரை வழிபாட்டிற்கு சிறந்த நேரமாக இருந்து வருகிறது.
- அன்றைய திருநாளில் பக்தர்கள் விரதமிருந்து சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியாரை வழிபட்டு தனது வேண்டுதல்கள் அனைத்தையும் வைத்தால் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
- மகா சிவராத்திரி திருநாளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நமது உடல் மற்றும் மனம் மிகுந்த அமைதியை பெறுகின்றன. மேலும் நமது வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிரம்பும் என கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி
- மகா சிவராத்திரி திருநாள் ஆண்டுக்கு ஒரு முறை குளிர்காலத்திற்கு பிற்பகுதியில் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் ஒன்றாக பயணம் செய்வதாக கருதப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி திருநாள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமண நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்த திருநாளில் சிவபெருமான் மாதா கௌரியோடு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி திருநாளில் விரதம் இருந்து சிவபெருமான் மற்றும் கௌரியை முறையாக வழிபடுவதன் மூலம் நமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
- இன்று திருநாளில் விரதம் இருக்கும் இளம் பெண்கள் இடைவிடாத அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறுவார்கள் என கூறப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் அவர்கள் விரும்பிய வாழ்க்கை அமையும் எனக் கூறப்படுகிறது. திருமணத்திற்காக மகா சிவராத்திரி திருநாளில் விரதம் இருப்பது மிகப்பெரிய வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
