Suriyan Zodiac: சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்.. பணத்தில் செழிப்பு.. கடின உழைப்பு.. உச்ச வாழ்க்கை.. திருமண யோகம்..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suriyan Zodiac: சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்.. பணத்தில் செழிப்பு.. கடின உழைப்பு.. உச்ச வாழ்க்கை.. திருமண யோகம்..

Suriyan Zodiac: சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்.. பணத்தில் செழிப்பு.. கடின உழைப்பு.. உச்ச வாழ்க்கை.. திருமண யோகம்..

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2025 12:52 PM IST

Suriyan Zodiac: சில ராசிகள் சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக உள்ளனர். அந்த வகையில் சூரிய பகவானின் ஆசீர்வாதம் பெற்ற குறிப்பிட்ட சில ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Suriyan Zodiac: சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்.. பணத்தில் செழிப்பு.. கடின உழைப்பு.. உச்ச வாழ்க்கை.. திருமண யோகம்..
Suriyan Zodiac: சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்.. பணத்தில் செழிப்பு.. கடின உழைப்பு.. உச்ச வாழ்க்கை.. திருமண யோகம்..

சூரிய பகவானின் ஆசிர்வாதம் கிடைத்தால் அவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று தலைமை பண்பை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு கிரகங்களின் ஆசீர்வாதம் கிடைப்பதன் மூலம் அதன் அடிப்படையில் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.

இருப்பினும் ஒவ்வொரு கிரகமும் அவரவருக்கு பிடித்தமான ராசிகளை வைத்திருப்பார்கள். சில ராசிகள் சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக உள்ளனர். அந்த வகையில் சூரிய பகவானின் ஆசீர்வாதம் பெற்ற குறிப்பிட்ட சில ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தனுசு ராசி

சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் எப்போதும் சூரிய பகவான் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் போது சூரிய பகவான் உங்களை காப்பாற்றுவார். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிருப்தி அனைத்து விஷயங்களிலும் கிடைக்கும்.

வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படும். போது சூரிய பகவான் உங்களை அதிலிருந்து காப்பாற்றுவார்.

சிம்ம ராசி

சூரிய பகவானின் சொந்தமான ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். பல கிரகங்களின் இடமாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் சூரிய பகவான் உங்களுக்கு மன தைரியம் கொடுத்து அதிலிருந்து காப்பாற்றுவார். சிறப்பு ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு சூரியபகவானின் அருளால் உங்களுக்கு தலைமை பண்புகள் எப்போதும் இருக்கும்.

மற்றவர்களோடு இணைந்து தன்னம்பிக்கையோடு செயல்படக் கூடியவர்கள் நீங்கள். அவ்வப்போது நிதி நெருக்கடிகள் ஏற்பட்டாலும் ஒருபோதும் அது உங்களை பின்தொடர்ந்து வராது. அதற்கு காரணம் சூரிய பகவான் தான் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உங்கள் கருத்துக்கள் அனைத்து இடங்களிலும் கட்டாயம் கேட்கப்படும். ஏனென்றால் சூரிய பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

மேஷ ராசி

சூரிய பகவானின் ஆசி மிகுந்த ராசிகளில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு எப்போது சிக்கல்கள் ஏற்படுகிறதோ அப்போது சூரிய பகவான் இடையே புகுந்து உங்களை காப்பாற்றுவார். ஏனென்றால் அவருக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். கடின உழைப்பு மற்றும் நல்ல பலன்கள் உங்களுக்கு எப்போதும் தேடி வரும். இக்கட்டான சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்பட்டு வந்தாலும் அதனை கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு சூரிய பகவான் எப்போதும் கொடுப்பார். மன உளைச்சல் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய மன தைரியம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு எப்போதும் முன்னேற்றம் இருக்கும். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். செலவுகள் இருந்தாலும் உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கக்கூடும். தொழிலில் மிகப்பெரிய உயரங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இது அனைத்திற்கும் சூரிய பகவானின் ஆசீர்வாதம் தான் காரணம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner