Rahu Kalam: ராகு காலம் தான் சரியான நேரம் - கேட்பதைக் கொடுக்கும் தெய்வம் துர்க்கை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Kalam: ராகு காலம் தான் சரியான நேரம் - கேட்பதைக் கொடுக்கும் தெய்வம் துர்க்கை!

Rahu Kalam: ராகு காலம் தான் சரியான நேரம் - கேட்பதைக் கொடுக்கும் தெய்வம் துர்க்கை!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 30, 2023 01:04 PM IST

ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

துர்க்கை அம்மன் வழிபாடு
துர்க்கை அம்மன் வழிபாடு

இது போன்ற போட்டோக்கள்

பார்வதி தேவியின் முக்கிய அம்சமாக அனைவரும் வணங்கக்கூடிய தெய்வமாக விளங்குபவர் துர்கா தேவி. சக்தி தேவிக்கு இணையான சக்தி கொண்டவர் இந்த துர்கா தேவி. துக்கங்களை போக்கக்கூடியவர் என்பதால் இவருக்குத் துர்க்கை என்று பெயர்.

எவராலும் இவரை வெல்ல முடியாது என இவரது பெயருக்கு அர்த்தங்கள் உள்ளன. இந்த துர்கா தேவியின் வழிபாடு மிகவும் உன்னதம் நிறைந்தவை. குறிப்பிட்ட நேரம் காலம் இல்லாமல் அனைத்து நேரங்களிலும் இதுவரை வழிபாடு செய்யலாம்.

சிவபெருமான் கோயில்களில் துர்கா தேவிக்கென தனி சிலை சிலையும் இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபடுவது அதிக பலமும், நல்ல பலன்களும் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. உத்திர தெய்வமான துர்க்கை தீமைகளை அழித்து, கெட்ட குணங்களை நீக்கக் கூடியவர்.

கெட்டவை அனைத்தையும் அளிக்கும் தொழிலைத் துர்க்கை செய்து வருவதால் அவருக்கு ராகுகால வேலையில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ராகுகால துர்க்கை அம்மன் விரத வழிபாட்டிற்குச் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சிறந்த நாளாகும்.

விரத வழிபாடு சிறப்பு என்றாலும், இந்த குறிப்பிட்ட நாளில் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கடினமாக இருக்கக்கூடிய காரியங்களும் விரைவில் ஈடேறும் என்பது ஐதீகமாகும். செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு கால நேரமாகும். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு கால நேரமாகும்.

இந்த நேரத்தில் சிறப்புக் கோயிலாக இருந்தாலும் சரி, சிவபெருமான் கோயில்களாக இருந்தாலும் சரி கோயிலில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்குச் சிவப்பு நிற மலர்களைச் சாற்றி வழிபாடு செய்யலாம். எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி நமது வேண்டுதல்களைத் துர்க்கை அம்மனிடம் முறையிடலாம்.

இந்த இரண்டு கிழமைகள் மட்டுமல்லாது என் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் ஆறு மணி வரையிலான ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் சன்னதிக்கு முன் அமர்ந்து கொண்டு வழிபாடு செய்துவிட்டு, எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9