’தரித்திரத்தை ஓட விடும் சங்கு! உங்கள் பூஜை அறையில் சங்கு வைத்தால் இவ்வளவு நன்மைகளா!’ பலன் தரும் ஆன்மீக குறிப்புகள்!
வளம்புரிச் சங்கில் தீபம் ஏற்றி வணங்கி வழிபடலாம். சங்கு ஊதி வழிபடலாம். சங்கில் இருந்து வரும் ஒலி ஆனது தீய சக்திகளை அடக்கி வைக்கும். சங்கில் இருந்து வெளிப்படும் நாதம் சிறப்பை தரும்.
வீட்டில் வைக்கும் கண்ணாடி என்பது மகாலட்சுமியை குறிக்கிறது. நாம் கண்ணாடியை பார்க்கும் போது நமது குறைகளை வெளிப்படுத்தி அதனை ஒழுங்கு செய்ய உதவுகின்றது. எதை எல்லாம் ஒழுங்கு செய்ய காரணமாக உள்ளதோ அது அனைத்து உயர்வு பெற்றது என்பது ஆன்மீக நம்பிக்கை.
பூஜை அறையில் சங்கு வைத்து பூஜிக்கலாமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. சங்கை பொறுத்தவரை வடம்புரி மற்றும் இடபுரி சங்குகள் இரண்டிற்கும் ஒரே சக்திதான்.
இறைவன் வளமாக வந்தாலும் இடமாக வந்தாலும் நேருக கதியில் வந்தாலும் வக்கிரக கதியில் வந்தாலும் வாழ்வை மலரச் செய்வாய் என்பதுதான் அர்த்தம் வளம்புரிச் சங்கு வைத்துக்கொண்டு பல வேலை செய்யலாம்
வளம்புரிச் சங்கில் தீபம் ஏற்றி வணங்கி வழிபடலாம். சங்கு ஊதி வழிபடலாம். சங்கில் இருந்து வரும் ஒலி ஆனது தீய சக்திகளை அடக்கி வைக்கும். சங்கில் இருந்து வெளிப்படும் நாதம் சிறப்பை தரும்.
திருமால் கூட சங்கு, சக்கரம் உடனே காட்சி தருகிறார். சங்கில் நீர் நிரப்பி விஷேச திரவிய பொடிகளை சேர்த்து பூஜை செய்து வீட்டில் தெளிப்பதால் நன்மைகள் உண்டாகும். சங்கு தீர்த்தத்திற்கு தீமைகளை அகற்றும் வல்லமை உண்டு என்பது நம்பிக்கை ஆகும்.
வீட்டிற்காக வாங்கும் ஆடை, பொன், பொருட்கள் மீது சங்கில் இருந்த நீரை தெளிக்கும் போது தீட்டுக்களை நீக்கி நன்மைகளை தரும்.
முக்கிய பணிகளுக்காக வெளியூருக்கு செல்பவர்கள் சங்கு தீர்த்தத்தை வாசலில் தெளித்த பிறகு செல்லும் போது வெற்றிகள் கிட்டும் என்பது நம்பிக்கை.
சங்கில் இயற்கையாகவே ஓம்காரம் என்ற நாதம் வெளிப்படுகின்றது. சங்கானது மகாலட்சுமி குடியிருக்கும் வீடு என்பது ஐதீகம்.
32 வகையான சங்குகள் உள்ளது. இதில் சில சங்குகளை மட்டும் வீடுகளில் வைத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்