Women's Favourite Zodiacs : மாறாத அன்பும், ஆத்மார்த்தமாகவும், பெண்களை கவரும் வகையில் காதல் செய்யும் ராசிக்காரர்கள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Women's Favourite Zodiacs : மாறாத அன்பும், ஆத்மார்த்தமாகவும், பெண்களை கவரும் வகையில் காதல் செய்யும் ராசிக்காரர்கள் யார்?

Women's Favourite Zodiacs : மாறாத அன்பும், ஆத்மார்த்தமாகவும், பெண்களை கவரும் வகையில் காதல் செய்யும் ராசிக்காரர்கள் யார்?

Priyadarshini R HT Tamil
Published Aug 20, 2023 10:07 AM IST

Women's Favourite Zodiacs : ஆண்களே பெண்களை எப்படி கவருவது என்று நீங்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதாக காதல் கிடைத்துவிடுமாம். ஜோதிட ரீதியாக பெண்களுக்கு பிடித்த ராசிக்காரர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இது போன்ற போட்டோக்கள்

ரிஷபம் -

காதலில் கைதேர்ந்தவர்களாக ரிஷப ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். சுக்கிரன் இவர்களின் காதலுக்கு கை கொடுக்கிறார். இவர்களிடம் பிரத்யேக நடை, உடை, பாவனைகள் இருக்குமாம். அதனால் பெண்கள் இவர்களை எளிதாக காதலித்துவிடுவார்களாம். இவர்களுக்கு காதல் எளிதாக கிடைத்துவிடுவதால் அசால்டாக இருக்க மாட்டார்களாம். உண்மையாக காதல் செய்து, தங்கள் காதலில் தீர்மாக இருந்து வெற்றி பெறுவார்களாம். அதனால்தான் உங்கள் ரிஷப ராசி ஆண்களுக்கு காதல் யோகம் எப்போதும் இருக்கும் ஒன்றாம்.

மிதுனம் –

மிதுன ராசிக்காரர்கள் கலைநயமும், கற்பனைத்திறுனும் கொண்டவர்கள். இவர்களின் அதிபதி புதன். நரம்பு மண்டலத்தை ஆளும் கிரகம் புதன் என்பதால், ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே. இவர்களின் ஆண்மை தன்மை பெண்களை எளிதில் கவரும். இவர்களின் காதலும் தூய்மையானதா இருக்கும்.

சிம்மம் -

சிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் விரும்புவர். இவர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவரும் வல்லமை பெற்றவர்கள். அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். தைரியமும், துணிச்சலும் மிக்க இந்த ராசிக்காரர்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இவர்களின் காதல் அன்பு நிறைந்தது. காதலிக்காக எதையும் செய்வார்கள். பெண்கள் இவர்களை நம்பி காதலிக்கலாமாம்.

துலாம் -

துலாம் ராசிக்காரர்கள் எளிதாக மற்றவர்களை கவரும் திறன் பெற்றவர்கள். இவர்களுக்கும் சுக்கிரன் பலம் சேர்க்கிறார். அதனால் காதல் இவர்களுக்கு கைவந்த கலை. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்குமாம். ரொமாண்டிக் நாயகர்களாக இவர்கள் பெண்களை கவர்வார்களாம். இவர்களின் தோற்றம், மிடுக்கு, ஆளுமை உன அனைத்துக்கும் பெண்கள் மயங்குவார்களாம். உண்மையான காதலாக இருக்குமாம் இவர்களின் காதல்.

மகரம் -

மகரம் ராசிக்காரர்கள் அன்பானவர்கள், அசராதவர்கள், அடங்காதவர்கள். பெண்கள் மீது மாறாத அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமானதாக இருக்குமாம். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை உண்டாம். இவர்களின் அன்பில் கட்டுண்டே பெண்கள் இந்த ராசிக்காரர்களை அதிகம் விரும்புகிறார்களாம் (இவையனைத்தும் பொதுவான தகவல்கள் துல்லிய விவரங்களுக்கு சரியான நிபுணர்களை அணுகுவதே சிறந்தது)

Whats_app_banner

டாபிக்ஸ்