மேஷம் முதல் மீனம் வரை!நீங்கள் தொழில் செய்தால் லாபம் கிடைக்குமா? 11ஆம் இட ரகசியங்கள்
ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் இடமாக விளங்கும் 11ஆம் இடம் ஜாதகரின் பராக்கிரமத்தை வெளிக்கொண்டு வரும்.
நமது வாழ்கையின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இடமாக 11ஆம் இடம் விளங்குகிறது. லாபம், மூத்த சகோதரர், ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்பு ஆகியவற்றை தரும் ஸ்தானமாக இது உள்ளது. 11ஆம் வீட்டில் அதிக கிரகங்கள் இருந்தால் ஜாதகர் வெற்றியாளராக இருப்பார்.
பொதுவாக 3, 6, 10, 11 ஆகிய இடங்கள் உபஜெய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டின் அதிபதி வலுப்பெற்று இருப்பது ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண வாய்ப்புகளை தரும் சிக்கல்களையும் கொண்டது. அதே வேளையில் 7ஆம் அதிபதியை விட 11ஆம் அதிபதி இதற்கு வலுத்து இருக்க வேண்டும். ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் இடமாக விளங்கும் 11ஆம் இடம் ஜாதகரின் பராக்கிரமத்தை வெளிக்கொண்டு வரும்.
நவக்கிரகங்களும் 11ஆம் இடமும்!
சூரியன் 11ஆம் இடத்தில் இருந்தால், அரசு வேலை, அரசு பதவி, அதிகாரம், தகப்பன் வழியில் முன்னேற்றம் கிடைக்கும்.
சந்திரன் 11ஆம் இடத்தில் இருந்தால், நீர்நிலைகளால் ஆதாயம், திரவ பொருட்களில் வெற்றி, கால்நாடை வளர்ப்பில் யோகம், பெண்களால் ஆதாயம், பயணம் மூலம் வெற்றிகள் கிடைக்கும்.
செவ்வாய் பகவான் 11ஆம் இடத்தில் இருந்தால், பூமியால் ஆதாயம், சகோதரர்கள் உதவி, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் வெற்றி, மருத்துவதுறைகளில் சாதனை உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.
புதன் 11ஆம் இடத்தில் இருந்தால், தாய்மாமனின் ஆதரவு, அறிவால் ஆதாயம், பங்குச்சந்தை லாபம், வாதத்திறன், கல்வியால் மேன்மை, அறிவுசார் சொத்துரிமை பெறுவது, கலைத்துறைகளில் சாதிப்பது போன்ற நன்மைகள் கிடைக்கும்.
குரு பகவான் 11ஆம் இடத்தில் இருந்தால் குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். வங்கித் தொழில், அரசு வேலை, கல்வி அறிவு மூலம் ஆதாயமும், பெருமையும் கிடைக்கும்.
சுக்கிரன் 11ஆம் இடத்தில் இருந்தால் பெண்களால் ஆதாயம் கிடைக்கும். கலை, ஆபரணம், ஆடை, உணவு ஆகிய துறைகளில் லாபம் கிடைக்கும்.
சனி 11ஆம் இடத்தில் இருந்தால் இரும்பு மற்றும் கழிவு பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
ராகு 11ஆம் இடத்தில் இருந்தால் வெளிநாட்டு பயணம் மூலம் பொருள் சேரும். பங்குச்சந்தை, ஊக வணிகம், மருந்து பொருட்கள் மூலம் லாபம் உண்டாகும்.
கேது 11ஆம் இடத்தில் இருந்தால் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கூடும். யோகா, தியானம் சார்ந்த தொழில்களில் லாபம் கிடைக்கும். மாற்று மருத்துவ துறைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
டாபிக்ஸ்