பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!

பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 27, 2025 06:41 PM IST

வீட்டில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்க என்னென்ன வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!
பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் பணகஷ்டம் நீங்குமா?.. வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன? - விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை கற்பூரத்தின் வாசனை வீட்டில் மகாலட்சுமியின் அருளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பச்சை கற்பூரம் இருக்க வேண்டும். பச்சை கற்பூரத்துக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாகக் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணப் புழக்கம் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை. பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய தீயசக்தியானது வீட்டை விட்டு வெளியேறிவிடும். அதனால் வீட்டில் எப்போதும் பச்சை கற்பூரம் இருப்பது நல்லது. வீட்டில் நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். தீய சக்தி, கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவை விலகுவதற்கு இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது.

குல தெய்வத்தையும், நாம் விரும்பும் இஷ்ட தெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து இந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் வீட்டில் பணகஷ்டம் இல்லாமல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நல்ல வாசனை உள்ள இடத்தில் தான் லட்சுமி தேவி குடியேறுவாள். எனவே, இந்த பச்சை கற்பூரத்தை மேலே சொன்னது போல பயன்படுத்தினால் வீட்டில் செல்வம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.