தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Puratasi 2023: பெருமாளுக்கு புரட்டாசிக்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்? இந்த மாதம் ஏன் அசைவம் கூடாது!

Puratasi 2023: பெருமாளுக்கு புரட்டாசிக்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்? இந்த மாதம் ஏன் அசைவம் கூடாது!

Kathiravan V HT Tamil
Sep 18, 2023 08:32 PM IST

”இந்த மாதத்தின் அதிபதியாக புதன் உள்ளார்”

கன்னி ராசி - பெருமாள்
கன்னி ராசி - பெருமாள்

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாக கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றில் ஒன்று வேறுபாடான இரண்டு வெவ்வேறு விஷயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை.

இந்து முறைப்படி ஒரு நாள் என்பது சூரிய உதயத்தில் தொடங்கி அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாக கணக்கிடப்படுகிறது. ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும்.

முறைப்படி அந்த நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். 

மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் எடுத்துக்கொள்ளப்படும்.

ஜோதிடத்தில் 6ஆவது ராசி கன்னிக்குள் சூரியன் நுழையும் மாதமே புரட்டாசி மாதமாக கணக்கிடப்படுகிறது. இந்த மாதத்தின் அதிபதியாக புதன் உள்ளார். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் என்பதால் புரட்டாசி மாதம் பெருமாளின் மாதமாக உள்ளது

புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் தட்ப வெப்பம் வேறாக இருக்கும் மேலும் பூமியின் தன் சுழலும் அச்சில் இருந்து டிகிரி மாறும் இதனால் நமக்கு செரிமானக் குறைவும்,வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து,உடம்புக்கும்,வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கசொன்னார்கள்.

WhatsApp channel