விரட்டி அடிக்கப்படும் அதிர்ஷ்டம்.. உடல் உபாதை! வீட்டின் வாசல் படியில் ஏன் அமரக்கூடாது? என்ன பிரச்னைகள் வரும்?
வீட்டின் வாசல் படியில் குலதெய்வம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக மஞ்சள், குங்குமம் பூசி வழிபாடு செய்யப்படுகிறது. எனவே வீட்டின் வாசலில் அமர்ந்தால் என்ன பிரச்னைகள் வரும் என்பதை பார்க்கலாம்
வாசல் பிரதான கதவின் முக்கிய பகுதி மட்டுமல்ல, மத ரீதியாக முக்கியத்துவத்தையும் கொண்டதாகவும். இந்த காரணத்துக்காக இந்துக்கள் வாசலை வணங்குகிறார்கள்.
வாசல் என்பது வீட்டின் கதவு தொடர்பான ஒரு பகுதி மட்டுமல்ல, அதற்கு ஒரு மத இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. வாசல் விஷயத்திலும் பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. சிலர் தினமும், சிலர் வெள்ளிக்கிழமை தோறும் வாசலுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்தும், மலர்கள் வைத்தும் வழிபடுவார்கள். வாசல் வீட்டுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது என்று நம்பப்படுகிறது.
வாசலை வணங்குவது வீட்டுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதாக நம்பப்படுகிறது. அத்துடன் வாசலை சுத்தமாக வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டுக்குள் நுழைய முடியாது. எனவே, வாசல்கள் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
கடவுளை வழிபடுவது போல் வழிபடப்படுகிறது. வாசலில் மட்டுமின்றி, கதவின் உச்சியிலும் மஞ்சள், குங்குமம், மாலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. வாசலை வழிபடுவதன் மூலம், தெய்வங்கள் வீட்டுக்குள் நுழைந்து, ஆசீர்வாதம் அளிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் சிலர் வாசலை மிதித்து அதில் அமர்ந்து விடுகிறார்கள். அவ்வாறு செய்வது தவறு.
வீட்டின் கதவுகளில் இருக்கும் குலதெய்வங்கள்
இந்து மதத்தில் ஒவ்வொரு குடும்பத்ததுக்கும் குலதெய்வங்கள் இருப்பதுண்டு. குலதெய்வ வழிபாடு பல்வேறு வகைகளில் அந்த குடும்பத்துக்கு நன்மை தருவதோடு, பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் தெய்வமாக குலதெய்வங்கள் இருக்கின்றன.
வீட்டின் கதவுகளில் குலதெய்வங்கள் இருப்பதாக சாஸ்திரங்களில் சொல்லப்படுகின்றன. சில சமயங்களில் பெரிய ஆபத்தில் இருந்தால் தப்பித்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது என்று சொல்வதுண்டு.
அந்த வகையில் குடும்பத்துக்கு ஏற்படும் இன்னல்கள், துயரங்களில் இருந்து காப்பாற்றி, துணையாக குலதெய்வங்கள் தான் நிற்கின்றன என ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. எனவே குலதெய்வம் குடியிருக்கும் இடமாக கருத்தப்படுவதால் மாலை நேரத்தில் நிலைவாசல் படியில் மஞ்சள், குங்குமம் வைத்து விளக்கு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே வாசல்படியில் அமரக்கூடாது என வீட்டின் பெரியவர்கள் சொல்வதுண்டு
வீட்டின் வாசலில் ஏன் உட்காரக்கூடாது?
மத பாரம்பரியம் மற்றும் ஜோதிடத்தின் படி, வாசலில் அமர்வது மங்களமாக கருதப்படுவதில்லை. அவ்வாறு செய்வது கடவுளை அவமதிப்பதாகவும், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டுக்குள் நுழைய நாமே அனுமதிப்பதாகவும் நம்பப்படுகிறது.
இவ்வாறு செய்வதால் வீட்டில் ஆன்மிக சக்தி மற்றும் தெய்வீக பாதுகாப்பு குறைகிறது. கூடுதலாக, வாசலில் அமர்வது நிதி வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஜோதிடம் விளக்குகிறது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் எதிர்மறை மற்றும் குறைபாடுகளைக் குறிக்கிறது. இதன் விளைவாக மன அமைதி சீர்குலைந்து, எதிர்மறை ஆற்றல்களின் கட்டளைகள் மற்றும் தாக்கங்களுக்கு நாம் எளிதில் பாதிக்கப்படுகிறோம் என்றும் நம்பப்படுகிறது.
வாசலில் அமர்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
- வாசலில் அமர்வதால் நேர்மறை ஆற்றல்கள் வீட்டுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, தீய ஆற்றல்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் ஒரு நபரின் ஆன்மீக சக்தியை பலவீனப்படுத்துகிறது. தீய சக்திகளின் தாக்கத்தால் அமைதியின்மை, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
- வாசலில் அமர்வது உடலுக்கு சரியான ஆதரவை வழங்காது. உடல் சோர்வு, முழங்கால் வலி, மன உளைச்சல், நரம்பு பிரச்னைகள் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
- அதிர்ஷ்டத்தை குறைக்கிறது. உடல்நலம், நிதி, கல்வி ஆகிய அனைத்து விஷயங்களிலும் தோல்விக்கு வழிவகுக்கிறது.
- வாசலில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் படிப்படியாக உடல் உடமை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
டாபிக்ஸ்