Wealth Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கோடிஸ்வர யோகம் யாருக்கு? இதோ விவரம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Wealth Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கோடிஸ்வர யோகம் யாருக்கு? இதோ விவரம்!

Wealth Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கோடிஸ்வர யோகம் யாருக்கு? இதோ விவரம்!

Kathiravan V HT Tamil
Apr 21, 2024 08:43 AM IST

“ஆனால் பெரிய அளவில் கோடீஸ்வரன் ஆவதற்கு சாயா கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவின் ஆதரவு தேவைப்படுகிறது”

கோடிகளை குவிக்கும் கோடீஸ்வர யோகம் குறித்த தகவல்கள்
கோடிகளை குவிக்கும் கோடீஸ்வர யோகம் குறித்த தகவல்கள்

ஒருவர் தனது வாழ்கயில் கோடிகளை குவிக்க ஜாதகத்தில் குரு பகவான் மிக பலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பணத்தை உருவாக்க கூடிய ஒரு கிரகத்தையும் குரு பகவான் பார்ப்பது மிக அவசியம். 

பணத்தை உருவாக்க கூடிய ஒரு கிரகத்தை குரு பகவான் பார்த்தால் நிச்சயமாக ஜாதகர் கோடீஸ்வரர் ஆகிவிடுவார் என ஜோதிடர் வேலூர் பாலசுப்பிரமணியன் கூறுகிறார். 

உதாரணமாக குரு பகவானின் பார்வை சந்திரன் மீது விழுந்தால் அந்த ஜாதகர் கோடிகளை குவிப்பார். 

செவ்வாயை குரு பகவான் பார்த்தால், நிலம், ரியல் எஸ்டேட் தொழிகள் மூலம் அந்த ஜாதகர் செல்வம் குறிப்பார். 

சனி பகாவனை குரு பார்த்தால் சிவ பக்தியில் ஜாதகர் நாட்டம் கொள்வார்.

புதன் கிரகத்தை குரு பார்த்தால் பெரிய வியாபாரியாக ஆவார்கள். 

ஆனால் பெரிய அளவில் கோடீஸ்வரன் ஆவதற்கு சாயா கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவின் ஆதரவு தேவைப்படுகிறது. 

ராகு பகவான் போகத்திற்கு காரகன் ஆவார். குரு பகவான் ராகுவை பார்த்தால் அந்த ஜாதகர் நல்ல வசதியாக வாழ்வார். ராஜபோகங்களை அந்த ஜாதகர் அனுபவிப்பார். 

ஆனால் அதைவிட அதிக பணம் சேர்க்க வேண்டுமென்றால் கேது பகவானை குரு பகவான் பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் பெரும் செல்வத்தை அந்த ஜாதகர் சேர்ப்பார். 

ஞானகாரகன் ஆன கேது பகவான், புதையல், எதிர்பாராத தனம், பூமிக்கு அடியில் இருக்கும் செல்வங்களுக்கும் காரகன் ஆவார். 

குரு பகவான் கேதுவை தனது 5 மற்றும் 9ஆவது திரிகோண பார்வையில் பார்த்தால் அந்த ஜாதகர் கண்டிப்பாக கோடிஸ்வரன் ஆவார். ஆனால் அதே வேளையில் 7ஆம் பார்வையாக பார்த்தால் குரு பலத்தை இழப்பார். 

குருவின் 5 அல்லது 9ஆவது பார்வையோ ராகுவின் மீது விழுந்தால் அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் கோடீஸ்வர ராஜயோகத்தை அனுபவிப்பார். 

ஆனால் கேது பகவான் மீது விழும் குருவின் பார்வையால் கிடைக்கும் செல்வத்தால் அந்த ஜாதகர் போகத்தை அனுபவிக்க முடியாது, அவரது வாரிசுகள் அந்த செல்வத்தை அனுபவிப்பார்கள். ஆனால் இவர்கள் ஞானத்தில் திளைப்பார்கள்.  பணம் இருந்தாலும் அவர்கள் மனம் பணத்தின் மீது செல்லாது. 

குரு-கேது சேர்க்கை கூட கோடீஸ்வர ராஜயோகம் உண்டாகும் என்றாலும், அது அவ்வளவு வீரியமாக இருக்காது. ராகு, கேது உடன் எந்த கிரகங்கள் சேர்ந்தாலும், அந்த கிரகங்களின் காரகங்களை ராகு கேதுக்கள் தன் வசப்படுத்தி விடும். அதே போல் குரு-ராகு சேர்க்கை தோஷத்தையும் விளைவிக்க கூடியது. 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner