தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Govt Jobs: ’அரசு வேலை வேண்டுமா? இந்த 4 கிரகங்கள் சப்போர்ட் அவசியம்!’ இத செக் பண்ணுங்க!

Govt Jobs: ’அரசு வேலை வேண்டுமா? இந்த 4 கிரகங்கள் சப்போர்ட் அவசியம்!’ இத செக் பண்ணுங்க!

Kathiravan V HT Tamil
Apr 19, 2024 03:49 PM IST

”தொழில் ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 10ஆம் இடத்தை குறிக்கிறது. இலாப ஸ்தானமாக 2ஆம் இடம் குறிக்கப்படுகிறது”

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

அரசு வேலைக்கு காரக கிரகமாக சூரியன் பகாவன் ஜாதகத்தில் வலுவாக இருப்பது அவசியம். ஆனால் இதற்கு சூரியன் பகவான் மட்டுமே பலமாக இருந்தால் போதாது வேறு சில கிரகங்களின் ஆதரவும் தேவை என்கிறார். ஜோதிடர் வேலூர் பாலசுப்பிரமணியன். 

ஜோதிடத்தை பொறுத்தவரை சூரியன், செவ்வாய், குரு, சனி என ராஜ கிரகங்கள் வகைப்படுத்துகின்றனர். 

இதில் செவ்வாய் கிரகம் அதிகாரத்தையும், குரு கிரகம் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது. எனவே ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், குரு, சனி ஆகிய 4 கிரகங்களும் வலுவாக இருந்தால்தான் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

ஆனால் இந்த கிரகங்கள் நீசமாக கூடாது. மேலும் சாயா கிரகங்கள் என சொல்லப்படும் ராகு, கேது ஆகிய கிரகங்கள் உடன் சேர்ந்து இருக்க கூடாது என்பது விதியாக உள்ளது. 

ஒரு வேளை கிரகங்கள் நீசம் ஆகி இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் இருக்க வாய்ப்பு உண்டா என்பதையும் பார்க்க வேண்டும். 

தொழில் ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 10ஆம் இடத்தை குறிக்கிறது. இலாப ஸ்தானமாக 2ஆம் இடம் குறிக்கப்படுகிறது. ஜோதிடத்தை பொறுத்தவரை 2, 6, 10ஆம் இடங்களில் இந்த ராஜ கிரகங்கள் உடன் ஏதேனும் தொடர்பு இருந்தால் அரசு வேலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் ஆகிறது என்கிறார் ஜோதிடர் பாலசுப்பிரமணியன். 

குறிப்பாக தசம கேந்திரமான 10ஆம் இடத்தில் இந்த ராஜ கிரகங்களின் கூட்டு இருந்தால் கண்டிப்பாக அரசு தொடர்பான செயல்களில் ஏதோ ஒரு வேலையை ஜாதகர் செய்ய வாய்ப்புக்கள் உண்டு. 

இது நேரடி அரசு வேலையாகவோ அல்லது அரசுக்கு உதவக்கூடிய தொழில்களிலோ இவர்கள் ஈடுபட வாய்ப்பு உண்டு.

இதில் சூரியன் வலுவாக இருந்தால் மத்திய அரசு பணிகளில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது, செவ்வாய் வலுவாக இருந்தால் மாநில அரசு வேலைகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக மேற்சொன்ன இடங்களில் குரு 10ஆம் இடத்தில் இல்லாமல் இந்த இடங்களை பார்த்தால் மிகவும் நல்லது.  

அதே போல் கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். 

மேஷம் மற்றும் தனுசு லக்னத்திற்கும் விரைவில் அரசு வேலை கிடக்க வாய்ப்பு உண்டு. விருச்சிக லக்னத்தை பொறுத்தவரை எல்லை சார்ந்த பகுதிகளில் பணியாற்றும் அரசு வேலைகளில் பணியாற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் ஒருவரது ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம், கஜகேசரி யோகம், சிவராஜ யோகத்திற்கான அமைப்பு இருந்தால் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று அர்த்தம் ஆகும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel