தமிழ் செய்திகள்  /  Astrology  /  Who Can Get This Vidyut Yoga In Horoscope Tamil Astrology News

Vidyut Yoga: அரசாளும் தகுதி; ஆட்டிப்படைக்கும் அதிகாரம்; லட்சியவெறி.. ‘வித்யுத் யோகம்’ கொடுக்கும் வியக்கவைக்கும் பலன்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 13, 2024 03:19 PM IST

சமூகத்தினரால் நன்றாக மதிக்கும்படியாக வாழ்வது வித்தைகளால் அதிக வெற்றியை பெறுவது, விளையாட்டு துறையில், கலைத்துறையில் சாதிப்பது உள்ளிட்ட யோகங்கள் இவர்களது கைவந்து சேரும்.

வித்யுத் யோகம்!
வித்யுத் யோகம்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ எந்த ஒரு யோகத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்றாலும், அதற்கு லக்னாதிபதி மிகவும் வலுவானவராக இருக்க வேண்டும் அது அடிப்படை விதி ஆகும்.

இயற்கை சுபர்களில் முதன்மையானவருமானவரும், எந்த நிலையிலும் நன்மையைச் செய்யக்கூடியவருமான குருவும்,அடுத்த நிலை சுபருமான சுக்கிரனும், இந்த யோகத்திற்கு மிக முக்கியமான ஆட்கள் ஆவர். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் திருமண சிக்கல்கள் வரும் என்பது உண்மைதான் ஆனால் அது தனி விதி.

நமது லக்னத்திற்கு லாபாதிபதி என்று ஒருவர் இருப்பார். இந்த லாபாதிபதியாக சொல்லக்கூடிய 11-ம் அதிபதியோடு குரு அல்லது சுக்கிரன் யாரோ ஒருவர் இணைந்து லக்ன கேந்திரத்தில் அல்லது லக்னாதிபதியின் கேந்திரத்தில் இருக்க வேண்டும். இதுதான் வித்யுத் யோகத்தின் சூட்சமம்.

இந்த யோகத்தை பெற்றவர்கள் அரசாளும் தகுதியை பெறுவார்கள். அரசு வேலை, நிதி நிறுவனங்கள் நடத்துவது, வங்கி பொறுப்புகளில் மிக உயர்ந்த பதவிகளில் அங்கம் வகிப்பது, லட்சியங்களை ஈடேற்றிக் கொள்வது, குல தர்மம் காப்பது அதிலேயே வளர்ச்சி அடைவது, பெரியோர்களை மதிப்பது, அறக்கட்டளை நடத்துவது, அநாதை இல்லங்கள் நடத்துவது என முக்கியமான பொறுப்புகளில் அங்கம் வகிப்பார்கள். 

அதேபோல சமூகத்தினரால் நன்றாக மதிக்கும்படியாக வாழ்வது வித்தைகளால் அதிக வெற்றியை பெறுவது, விளையாட்டு துறையில், கலைத்துறையில் சாதிப்பது உள்ளிட்ட யோகங்கள் இவர்களது கைவந்து சேரும். 

இது மட்டுமல்ல இந்த யோகத்தை பெற்றவர்கள் எந்த துறையில் பணியாற்றுகிறார்களோ அந்தத் துறையில் இவர்கள் மேலே வருவதற்கு இந்த யோகமானது உறுதுணையாக இருக்கும்” என்று பேசினார். 

கூடவே, சனி பகவானை வெல்வது எப்படி என்பதை பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன், தன்னுடைய ஆஸ்ட்ரோ வெல் யூடியூப் சேனலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக பேசியவற்றையும் பார்க்கலாம்

அவர் பேசும் போது, “ஏழரை சனி என்றால் கண்டிப்பாக பிரச்சினை இருக்கத்தான் செய்யும்; அதனை முதலில் நாம் மனதார ஒத்துக்கொள்ளதான் வேண்டும். சனி பகவானுக்கு நீங்கள் விரோதி அல்ல. சனி பகவானை பொருத்தவரை நல்ல கர்மாவை செய்தவன் அவருக்கு நண்பன் ஆகிறான்.

நல்ல கர்மாவை செய்தவனுக்கு அஷ்டமசனியோ அல்லது ஏழரை சனியோ அந்த காலத்தில் அவனுக்கு நல்ல பலன்களே கிடைக்கும். ஏனென்றால் அவன் தர்மகாரகன். தர்மத்திற்கு பேர் போனவன். மீனராசிக்கு ஏழரை சனி நடக்கிறது. அவர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொதுவாகவே நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.

ஆனால் அதையெல்லாம் இந்த காலகட்டத்தில் ஒத்தி வைத்துவிட்டு சாதாரணமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.அதாவது எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் சனி பகவானை வெல்வதற்கான உத்தி.

ஏழரை சனியில் சனி பகவான் உங்களது புத்தியை மழுங்கடிப்பார். எதை நீங்கள் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ, அதை செய்ய தூண்டுவார். எதை நீங்கள் பேசக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அதை பேச தூண்டுவார். இதுதான் உண்மை

இதிலிருந்து தப்பிப்பதற்கு உங்களது எண்ணங்களை அவ்வப்போது தூய்மை செய்ய வேண்டும். அதற்கு அதிகாலை 6 மணிக்கு முன்னதாக எழுந்து தியானம் செய்ய வேண்டும்.

எண்ணங்கள் தூய்மையாகும் பொழுதே, உங்களது வார்த்தைகளில் ஒரு விதமான பிடிப்பு தன்மை வரும். வார்த்தைகளில் பிடிப்பு வரும்பொழுது, உங்களது செயல்களிலும் ஒருவிதமான பிடிப்பு வரும்.

இவை மூன்றிலும் பிடிப்பு வரும் பொழுது உங்களது வாழ்க்கையிலும் ஒரு விதமான பிடிப்பு வரும். சனி பகவான் உங்களிடம் இருக்கும் செல்வத்தை பிடுங்குவார். ஆகையால் அவர் பிடுங்குவதற்கு முன்னதாகவே, நீங்கள் தான தர்மம் செய்ய வேண்டும்.

சனி பகவான் உறவுகளை பிரிக்கும் வேலையைச் செய்வார். ஆகையால் நீங்கள் உங்களது உறவுகளிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். பெரிய நந்தி இருக்கக்கூடிய சிவாலயங்களுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய பசுவிற்கு அகத்திக் கீரையை உணவாக கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்