Lust In Astrology: ’காமம் செய்யும் கோளாறு! பெண் பித்து பிடித்த ராசிகள் எது தெரியுமா?’ இதோ முழு விவரம்!
”பெண்கள் மீதான மோகம் மற்றும் காமம் என்பது பெரும் போதையாக பார்க்கப்படுகிறது. சுக்கிரன் நீசம் பெற்ற ஒருவருக்கு ஜோதிட ரீதியாக பெண் பித்து ஏற்படும் நிலை ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன”
பெண் பித்து காரணமாக உடல் முழுவதும் யோனி துவாரமாக மாறிய சாபத்தை இந்திரன் பெற்றார். 27 மனைவிகளை மணந்தும் ஆசை தீராமல் சந்திரன் தாரகை என்ற பெண்ணிடம் சென்றதால் பிரச்னைகளுக்கு உள்ளனார் என புராண வரலாறுகள் கூறுகின்றன. ராமாயணத்தில் கூட பெண் பித்து காரணமாக ராவணன் தனது ராஜ்யத்தையும், தனது உயிரையும் இழந்தார்.
சுக்கிரன் நீசம் செய்யும் வேலை!
ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகம் நீசமாக உள்ளதோ, அந்த கிரகத்தின் மீதான காரகத்துவங்கள் மீதுதான் மனது பற்றும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அந்த அடிப்படையில் சுக்கிரன் நீசம் பெற்றவர்களுக்கு தாம்பத்ய விஷயங்களில் இயலாமை இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் பெண்கள் மீது அதிக ஆசை இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் 6ஆம் இடத்திலேயோ அல்லது 8ஆம் இடத்திலேயோ மறைந்து இருக்க கூடிய ஜாதகர்களுக்கும் பெண்கள் மீது மோகம் கொண்டிருக்கும் நிலை உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
பெண் பித்து படுத்தும்பாடு!
அதே போல சுக்கிரனும், செவ்வாயும் இணைந்து இருக்க கூடிய ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கும் பெண்கள் மீது அதிக மோகம் இருக்கும். இந்த நிலையில் உள்ளவர்களில் சுக்கிரனோ அல்லது செவ்வாயோ நீசம் பெற்றுவிட்டால் பெண் பித்து மேலும் அதிகமாக இருக்கும்.
இந்த இரண்டு கிரக சேர்க்கை உடன் போக காரகனான ராகுவும் இணைந்துவிட்டால் பூதாகரமான பெரும் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். ஆனால் கடவுள் கருணை ஜாதகருக்கு இருந்தால் மாற்றம் ஏற்படும் என வேலூர் ஜோதிடர் பால சுப்பிரமணியன் கூறுகிறார்.
அதே ஒரு சில ஜாதகருக்கு ஒரு சில தசாபுத்திகளில் பெண்கள் மேல் பித்து ஏற்பட்டு அது விடுபட்டுவிடும்.
பெண் பித்தை ஏற்படுத்தும் தசைகள்!
சுக்கிர மகா தசை; ராகு புத்தி, ராகு தசை ; சுக்கிர புத்தி, சுக்கிர மகா தசையில் கேது புத்தி, கேது தசையில் சுக்கிர புத்தி ஆகிய காலகட்டங்களில் ஜாதகருக்கு பெண்கள் மேல் பித்து ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட்டு தசை முடிந்த உடன் பெண் பித்து தீர வாய்ப்புகள் உள்ளது.
அதே போல் செவ்வாய், ராகு கிரக சேர்க்கை இருக்கும் போது பெண்களுக்கு ஆண்கள் மேல் ஈர்ப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ராகு, சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரக சேர்க்கையும் கடுமையான பெண் பித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
ஒருவருக்கு ராகு புத்தி ஏற்படும் போது அதிக போகங்களை ஏற்படுத்தி பெண் பித்தை உருவாக்கினாலும் பிரச்னைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். ஆனால் கேது புத்தி நடைபெறும் போது பெண் பித்து ஏற்பட்டால் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டு அவமானங்களை தந்துவிடும் .
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.