Horoscope Luck: ‘பொண்டாட்டி பத்திரம்’.. கொஞ்சம் மிஸ் ஆச்சு அவ்வளவுதான்! - கள்ளத்தொடர்பில் சிக்க வைக்கும் ராசிகள் எவை?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope Luck: ‘பொண்டாட்டி பத்திரம்’.. கொஞ்சம் மிஸ் ஆச்சு அவ்வளவுதான்! - கள்ளத்தொடர்பில் சிக்க வைக்கும் ராசிகள் எவை?

Horoscope Luck: ‘பொண்டாட்டி பத்திரம்’.. கொஞ்சம் மிஸ் ஆச்சு அவ்வளவுதான்! - கள்ளத்தொடர்பில் சிக்க வைக்கும் ராசிகள் எவை?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 23, 2024 05:10 PM IST

கள்ளத் தொடர்புகளை பொறுத்த வரைக்கும், ராசியிலோ அல்லது லக்னத்திலோ ராகு இருந்தாலோ அல்லது 7ம் இடத்தில் இருந்தாலோ, நிச்சயமாக கள்ள தொடர்பு உருவாகும். அதே சமயம் ராசிநாதனுடன் ராகு சேர்ந்திருந்தாலும் கள்ளத்தொடர்பு உருவாகும்

கள்ளத்தொடர்பு வைக்கும் ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்!
கள்ளத்தொடர்பு வைக்கும் ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்!

எந்த விதமான ராசிகளுக்கு இந்த கள்ளத் தொடர்பு அதிகமான அளவில் ஏற்படும், அவர்களை அடையாளம் கண்டறிவது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம். 

இது குறித்து பிரபல ஜோதிடரான ராம்ஜி ரியல் ஒன் சேனலுக்கு பேசும் போது, “ மேஷ ராசிக்கு நிச்சயமாக கள்ளத்தொடர்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 

ரிஷப ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி ஆகிய மூன்று ராசிக்காரர்களும் கள்ளத்தொடர்பில் அதிகமாக சிக்குவதற்கான வாய்ப்பு 

காலப் புருஷத் தத்துவத்தில் 7 க்குடையவன் சுக்கிரன் என்பதால், மேஷ ராசிக்காரர்கள், காதலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதேசமயம் ரிஷப ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி ஆகிய மூன்று ராசிக்காரர்களும் கள்ளத்தொடர்பில் அதிகமாக சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

காரணம் ரிஷபமும், துலாமும் சுக்கிரனுடைய ராசிகள் ஆகும். இதில் ரிஷப ராசியில் ராகு உச்சம் அடைவார். விருச்சிக ராசியை பொருத்தவரை அதில் கேது பகவான் உச்சம் அடைவார். 

லக்னத்திலோ ராகு இருந்தாலோ அல்லது 7ம் இடத்தில் இருந்தாலோ, நிச்சயமாக கள்ள தொடர்பு உருவாகும்.

கள்ளத் தொடர்புகளை பொறுத்த வரைக்கும், ராசியிலோ அல்லது லக்னத்திலோ ராகு இருந்தாலோ அல்லது 7ம் இடத்தில் இருந்தாலோ, நிச்சயமாக கள்ள தொடர்பு உருவாகும். அதே சமயம் ராசிநாதனுடன் ராகு சேர்ந்திருந்தாலும் கள்ளத்தொடர்பு உருவாகும். 

ராகு உடன் சுக்கிரனும், சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால் அந்த பெண், உலக மகா தவறான பெண்ணாக இருப்பாள். 

சுக்கிரன், செவ்வாய், சந்திரன், புதன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அவர்கள் இரு பாலினத்தவராக இருப்பார்கள். 

சுக்கிரனும், கேதுவும் இணைந்து இருந்தால் ஓரினச்சேர்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள்.

கள்ளத்தொடர்புக்கு முழுமையான பொறுப்பு யார்? 

கள்ளத்தொடர்புக்கு முழுமையான பொறுப்பு யார் என்றால் அது ராகு பகவான் தான். சுக்கிரனை பொருத்தவரை அவர் புன்னகை வரையே செல்வார். ராகு தான் புடவை வரை செல்வார். 

இதில் ரிஷப ராகுவாக இருப்பவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஈசியாக கள்ள தொடர்பானது வந்துவிடும். அதேபோல லக்னாதிபதி மற்றும் 7 க்கு உடையவனோடு ராகு தொடர்பில் இருந்தால், அவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்