தமிழ் செய்திகள்  /  Astrology  /  Which Tamil Month Is Best To Build New Home What Says Vasthu Sastra

Veedu katta sirantha matham: எந்த தமிழ் மாதத்தில் வீடு கட்டினால் நல்லது.. எந்த மாதங்களில் வீடு கட்ட தொடங்க கூடாது?

Manigandan K T HT Tamil
Mar 20, 2024 04:52 PM IST

Veedu katta sirantha tamil matham: ஆவணி மாதத்தில் வீடு கட்டலாம். சொந்த பந்தங்களின் நட்புறவு அதிகரிக்கும். சோதனைகளை கடந்து செல்வீர்கள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் நல்ல நிலைக்கு செல்வார்கள். மேலும் எந்த தமிழ் மாதத்தில் வீடு கட்டினால் நல்லது என்பதை அறிய படிங்க.

வீடு
வீடு (pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்தரம், ஸ்திரம், உபயம் என மூன்று இயக்கங்களை 12 ராசிகளுக்கு பிரித்து வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் வீடு என்பது ஸ்திரத்தையும் நிலைத்தன்மையையும் குறிக்கும்.

நிலைத்தன்மை சம்பந்தப்பட்ட வீடு ஸ்திரம் இயக்கத்தில் வந்துவிடுகிறது.

சித்திரை மாதத்தில் வீடு கட்டலாமா?

சித்திரை மாதத்தில் வீடு கட்டக் கூடாது என்பதே வாஸ்து சாஸ்திரம் சொல்லும் கருத்து ஆகும். அந்த சமயத்தில் கட்டும் வீட்டில் செல்வம் தங்காது. சிந்தனை ஓட்டம் சரியாக இருக்காது.

செய்யக் கூடிய செயல்கள் சரியாக அமையாது.

வைகாசியில் வீடு கட்டினால் வெற்றி உண்டாகும். தன வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நட்புறவு என்பது தழைத்தோங்கும்.

ஆனி

ஆனி மாமதத்தில் வீடு கட்டினால் பகை அதிகமாகும். பதற்றமான சூழ்நிலை உண்டாகும். காரியத் தடை ஏற்படும். பிரயாணங்கள் மேற்கொள்ளும்போது பிரச்சனைகள் ஏற்படும். உடல்நலக் குறைவு ஏற்படும். இதனால் ஆனி மாதத்தில் வீடு கட்டக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் வீடு கட்டினால் செல்வம் குறையும். சித்திரை போன்று ஆடி மாதத்திலும் வீடு கட்டக் கூடாது.

அந்த வீட்டில் நிம்மதியாக வாழ முடியாது. நிறைய வீடுகளில் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வீடு கட்டுவதற்கே நீங்கள் நினைத்த தொகையைக் காட்டிலும் அதிகமாகக் கூடும்.

ஆவணி

ஆவணி மாதத்தில் வீடு கட்டலாம். சொந்த பந்தங்களின் நட்புறவு அதிகரிக்கும். சோதனைகளை கடந்து செல்வீர்கள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் நல்ல நிலைக்கு செல்வார்கள்.

புரட்டாசி

புரட்டாசி மாதத்தில் வீடு கட்டக் கூடாது. அப்படி கட்டினால் நோய் அதிகரிக்கும். சண்டை சச்சரவு, வம்பு தும்புகள், எந்த நேரமும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

வேலைக்கு செல்பவர்கள் இருந்தால் பல்வேறு இடமாற்றங்கள் ஏற்படும். வேலை ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஐப்பசி

ஐப்பசி மாதத்தில் வீடு கட்டக் கூடாது. மீறிக் கட்டும்பட்சத்தில் திருமணத் தடைகள் ஏற்படும். பொன், பொருள் சேராது.

கார்த்திகை

கார்த்திகை மாதத்தில் வீடு கட்டினால், செல்வம் உண்டாகும். செல்வம் அதிகரிக்கும்.

பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும்.

மார்கழி

மார்கழியில் வீடு கட்டக் கூடாது. பேய், பிசாசுகள் தொல்லை வரக் கூடும். எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். பதற்றமான சூழ்நிலை இருக்கும்.

தை மாதம்

தை மாதத்தில் வீடு கட்டக் கூடாது. அடிதடி பிரச்சனை ஏற்படக் கூடும்.

மாசி மாதம்

மாசியில் வீடு கட்டலாம். செல்வம் அதிகரிக்கும். வேலையில் பண வரவு அதிகரிக்கும். எண்ணிய செயல் நிறைவேறும்.

பங்குனி

பங்குனி மாதத்தில் வீடு கட்டக் கூடாது. திருடுப்போகும். அசிங்கம், அவமானம் ஆகியவை ஏற்படும்.

ஸ்திரத்தன்மையுடன் அமைவதற்கு ஸ்திர ராசிகள் அமைந்தால் மிகவும் நல்லது.

ஸ்திர ராசிகள் என்பது சிம்மம், ரிஷபம், விருச்சிகம் மற்றும் கும்பம். இந்த ஸ்திர ராசிகளில் சூரியன் பிரவேசிக்கும் மாதங்கள், சிறப்பான மாதங்களாக கருதப்படுகிறது.

அதாவது வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதம் ஆகியவற்றை சொல்லலாம். இந்த நான்கு மாதங்கள் வீடு கட்டுவதற்கு உகந்த மாதங்கள். அடுத்தபடியாக வீடுகட்ட ஆரம்பிக்கும் நாட்கள் என்று பார்த்தால், அந்த நாள் வளர்பிறை சுப மூஹூர்த்த நாளாக அமைய வேண்டும்.

அல்லது முஹூர்த்த நாளில், முஹூர்த்த நேரத்தில் நாம் வாஸ்து பூஜை செய்யலாம்.

அந்த முஹூர்த்த நாளிலேயே காலையில் பிரம்ம முஹூர்த்தத்தில் ஆரம்பிக்கலாம்.

அடுத்தபடியாக வாஸ்து பகவான் நித்திரை விடும் நாள். அதாவது அவர் எழுந்தருள கூடிய நாள். அந்த நாளில் நாம் வீடு கட்டும் பணிகளை தொடங்கினால் எந்தவித தடங்களும் வராமல் தோஷங்கள் இல்லாமல் வீடு கட்டும் பணிகள் மளமளவென வேகமெடுக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

WhatsApp channel

டாபிக்ஸ்