Mango Leaves Vastu Tips: செல்வ செழிப்பு, அமைதியை தரும் மா இலைகள்! வீட்டில் எந்த திசையில் மா மரத்தை வளர்க்க வேண்டும்
மங்களகரமான மர வகைகளில் ஒன்றாக இருந்து வரும் மாங்காய் மரத்தை வீட்டில் எந்த திசையில் வளர்த்தால் நன்மையும், செழிப்பும் கிடைக்கும். மா இலைகள் பலன்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை பார்க்கலாம்
ஆன்மிக சார்ந்த விஷயங்களில் பயன்படும் முக்கிய பொருள்களில் ஒன்றாக மாங்காய் மர இலைகள் இருக்கின்றன. அனைத்து விதமான சுப காரியங்களில் பயன்படுகிறது. மங்களகரமானதாக கருதப்படும் மா இலைகள், மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் கொண்டதாக உள்ளன.
முக்கனிகளில் முதல் கனியாக இருந்து வரும் மாம்பழத்தின் மரத்தில் இருக்கும் இந்த இலைகள் உங்களது வாழ்க்கையில் செழிப்பை தரும் என கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில், மா இலைகள் உங்களை துரதிர்ஷ்டத்திலிருந்து எளிதாகக் காப்பாற்றும் வல்லமை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை போக்கி, செழிப்பை பெற்று தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டின் விதியை கூட மாற்றும் சக்தி மாங்காய் மர இலைகளுக்கு உண்டு.
வீட்டில் வளர்க்கூடிய மாங்காய் மரம் குறிப்பிட்ட திசையில் இருந்தால் பலன்களை பெறலாம். மங்காய் மர இலைகளின் வாஸ்து நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மாங்காய் மரத்தை எந்த திசையில் வளர்த்தால் நன்மை?
வீட்டில் மாங்காய் மரத்தை தென் மேற்கு திசைகளில் வளர்ப்பதன் மூலம் செல்வ செழிப்பை பெறலாம். இதன் மூலம் வீட்டில் நேர்மறையான தாக்கம் ஏற்படும். அத்துடன் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலையில் இருந்து எளிதில் விடுபடலாம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.
உயரமான மாங்காய் மரங்களை வளர்ப்பது எப்படி?
வீட்டுக்கு மிக அருகில் மாங்காய் மரங்களை வளர்த்தல் கூடாது. இந்த மரத்தின் நிழல்கள் வீட்டில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 5 முதல் 6 மீட்டர் உயரமான மாங்காய் மரங்கள் வீட்டின் அருகே வளர்க்க கூடாது. வீட்டின் அருகில் மாங்காய் மரம் இருந்தால் குடும்பத்தினர் இடையே கூச்சலும், குழப்பமும் நிலவும் என கூறப்படுகிறது.
சில சமயங்களில் மாங்காய் மரத்தின் நிழல்கள் வீட்டின் பகுதிகள் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற சமயங்களில் அதன் கிளைகளை அறுத்து விடுவதை தவிர்த்து, வீட்டின் முன் பகுதியில் துளசி செடிகளை வளர்க்கலாம் என வாஸ்துவில் கூறப்படுகிறது. துளசி வளர்ப்பதன் மூலம் அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பை பெறலாம்
அமைதியை தரும் மாங்காய் இலைகள்
வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மாங்காய் மர இலைகளை தண்ணீரில் நனைத்து வீடு முழுவதிலும் தெளிக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் நிதநிலையில் ஆதாயத்தை பெறலாம்.
வீட்டின் முகப்பு பகுதியில் மாங்காய் இலையை தொங்க விடுவதன் மூலம் தீய சக்திகள், எதிர்மறை ஆற்றலின் பாதிப்புகளை தடுக்கலாம். இதனால் வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும்.
மாவிலை தோரணம் கட்டுவதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தொடர்பான பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்