ஜாக்பாட் அடிக்கப்போகும் 5 ராசிகள் யார் தெரியுமா? புதன் கிரகத்துடன் இணைந்து யோகம் வழங்கும் சுக்கிரன்!
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் இருந்து வருகிறார். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, அறிவு, கல்வி, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது இடம் மாறுவார்கள் அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும்.
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் இருந்து வருகிறார். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, அறிவு, கல்வி, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது இடம் மாறுவார்கள் அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். அந்த வகையில் புதன் பகவான் நவகிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒருவருடைய ராசிகள் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு கல்வி மற்றும் அறிவு உள்ளிட்ட விஷயங்களில் மிகுந்த பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதன் வழங்கும் சுக்கிர யோகம்
புதன் சுக்கிர பக்கவானுடன் இணைந்து ஒரு ராசியை வலுப்படுத்தும் போது அந்த ராசிக்காரருக்கு சுக்கிர யோகம் கிடைக்கிறது. இந்த சுக்கிர யோகத்தால் அந்தந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு காரியங்களில் வெற்றி, அதிர்ஷ்டம், செல்வ வளம் ஆகிய அனைத்தும்அதிகரிப்பதற்கான யோகம் உருவாகும். கணக்கிட முடியாத பல நன்மைகள் கிடைப்பதற்கான யோகம் வரப்போகிறது.
இவர்களிடம் இருக்கும் அறிவுத்திறன் எதிர்பாரா பலன்களை வழங்குகிறது. புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் இருக்கும் துலாம், கடகம், ரிஷபம், மீனம் மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது.
லாபஸ்தானத்தில் துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2 ஆம் இடத்தில் புதன் இருப்பதால், அள்ளிக் கொடுக்கும் லாபஸ்தானம் அமைகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. இந்த சமயத்தில் துலாம் தோட்டதெல்லாம் வெற்றி பெற போகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு அதிகமாகும். பண வரவு நிறைந்து வழியப்போகிறது.
கடக்க ராசிக்கு இனி ராஜா யோகம்
பஞ்சமஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்தில் சுக்கிர யோகம் நிறைவாக கிடைப்பதால் கடக ராசி காரர்களுக்கு குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை நீதிமன்ற வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் இந்த தருணத்தில் நிறைவாக கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.
நினைத்தை முடிக்கும் ரிஷப ராசி
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஏழாம் இடம் சப்தமஸ்தானத்தில் புதன் சுக்கிர யோகம் நிறைவாக கிடைப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்களை மறுகணமே செய்வதற்கான யோகம் நிறைவாக உண்டு. தங்கள் வாழ்வில் சந்திக்க கூடிய திருமண தடைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் விலகி சுப நிகழ்வுகள் சிறப்பாக கைக்கூடும்.
மீன ராசிக்கு நீச்ச அதிபதி
மீன ராசிக்காரர்களுக்கு பாக்கியஸ்தானத்தை ராசியின் உச்ச அதிபதியும் நீச்ச அதிபதியும் வலு சேர்ப்பதால் எதிர்பாராத அதிரடியான வாய்ப்புகள் நிறைவாக உண்டு. எதிர்பாராத தொழில் வாய்ப்புகள் எதிர்கால நலனை சிறப்பாக மாற்றி அமைக்கும்.
அதிக பண வரவில் மகரம்
மகர ராசிக்கு அதீத நன்மையை கொடுக்கக்கூடிய லாப ஸ்தானத்தில் புதன் சுக்கிர யோகம் கிடைப்பதால் இரட்டிப்பு நன்மை உண்டு. ராசியின் அதிபதியான சனிக்கு இரண்டு கிரகங்களுமே நட்பு கிரகங்கள் அவை இரண்டும் லாபஸ்தானத்தை வலுப்படுத்தக்கூடிய இந்த வேலை உச்சபட்ச நன்மை மகர ராசிக்காரர்களுக்கு உண்டு
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்