Good Luck: ராகு புதன் சம்பவம் ரெடி.. 3 ராசிகளுக்கு பணமழை உறுதி-where in the rasi will we find that rahu and mercury together will give good results - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Good Luck: ராகு புதன் சம்பவம் ரெடி.. 3 ராசிகளுக்கு பணமழை உறுதி

Good Luck: ராகு புதன் சம்பவம் ரெடி.. 3 ராசிகளுக்கு பணமழை உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 03:43 PM IST

Rahu and Mercury: ராகுவும் புதனும் சேர்ந்து நல்ல பலனை கொடுக்கப் போகும் ராசிகளில் எங்கே காண்போம்.

ராகு புதன் பெயர்ச்சி
ராகு புதன் பெயர்ச்சி

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கும் புதன் பகவான் புத்திசாலித்தனத்திற்கு அதிபதியாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்.

இந்நிலையில் மீன ராசியில் ராகு மற்றும் புதன் ஒன்றிணைந்து பயணம் செய்ய உள்ளனர். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நட்பு வட்டாரங்கள் அதிகமாகும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

துலாம் ராசி

 

ராகுவும் புதனும் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர். இந்த புத்தாண்டில் உங்களுக்கு சாதகமான சம்பவங்கள் அதிகம் நடக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

இரண்டு கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு வெற்றிகளை கொடுக்க போகின்றது. வருமானத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்