தமிழ் செய்திகள்  /  Astrology  /  What Kind Of Benefit Get When Mars Was Strong In The Horoscope In Astrology

Horoscope Luck: ஆக்கம்… அழிவு.. சொத்து.. செவ்வாய் பலம் கொடுக்கும் ஏகபோக பலன்கள் என்னென்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 03, 2024 05:53 PM IST

செவ்வாய் உங்களுக்கு பலமாக இருந்தால் சொத்து கண்டிப்பாக இருக்கும். செவ்வாய் பலமாக இருக்கும் நபர்கள் தொழிலில் மிகவும் தனித்துவமாக இருப்பார்கள் அதேபோல அவர்களுக்கு நிறைய ஈகோ இருக்கும்.

ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்
ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ பூமி, பற்கள், சக்தி வாய்ந்த மனிதர்கள் உள்ளிட்டவற்றை தொடர்பு படுத்தி இருக்கும் கிரகம் செவ்வாய். செவ்வாய் என்றாலே ஒரு சக்தி. செவ்வாய் என்றாலே ஒரு பலம். 

ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருக்கிறது என்றால், அவர்களுக்கு மனிதாபிமானம்  மிக அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தன்னுடைய ரத்த பந்தத்தின் மீது பற்று மிக அதிகமாக இருக்கும். 

செவ்வாய் உங்களுக்கு பலமாக இருந்தால் சொத்து கண்டிப்பாக இருக்கும். செவ்வாய் பலமாக இருக்கும் நபர்கள் தொழிலில் மிகவும் தனித்துவமாக இருப்பார்கள் அதேபோல அவர்களுக்கு நிறைய ஈகோ இருக்கும். 

செவ்வாய் பலமாக இருக்கும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகக்காரரின் அம்மாவிற்கு முன்கோபம் அதிகமாக வரும். ஆனால் அவர்கள் அவர்களது சகோதரத்துவத்தை தொடர்ச்சியாக நல்லபடியாக வைத்துக் கொள்வார்கள். 

செவ்வாய் பலமாக இருக்கும் பொழுது போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பணிகளில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லையென்றால் அந்த மாதிரியான பணிகளில் இருப்பவர்கள் உங்கள் அருகில் இருப்பார்கள்.

மகரத்தில் செவ்வாய் இருந்தால் பேசும் பேச்சால் பிரச்சினை விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது நெருக்கடிகள் ஏற்படும்.பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் . 

மகரத்தில் செவ்வாய் இருக்கும் என்றால், பிறந்தவுடன் கருமம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. செவ்வாய் ஆட்சியாகவோ,உச்சமாகவோ இருக்கும்பொழுது, ஜாதகக்காரரின் தந்தையானவர் கடுமையான போராட்டத்தை சந்திப்பார். மகரத்தில் யாருக்கேனும் செவ்வாய் இருந்தால், பெருமாள் பெயர் கொண்டவர்கள் உங்கள் குடும்பத்தில் இருப்பார்கள் செவ்வாய் இருக்கும் போது சொந்தத்தில் தொழில் செய்ய வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்று தோன்றும்” என்று பேசினார்.  

WhatsApp channel

டாபிக்ஸ்