தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sashti Viratham: சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

Sashti Viratham: சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

Aarthi Balaji HT Tamil
May 13, 2024 06:40 AM IST

Sashti Viratham: எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது, கந்த சஷ்டி கவசம்.

Sashti Viratham: சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
Sashti Viratham: சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

இந்த ஆண்டு சித்திரை வளர்பிறை கந்த சஷ்டி விரதம் இன்று ( மே 13) வந்து இருக்கிறது. காலை 02:50 AM வரை சஷ்டி பின்னர் சப்தமி திதி வருகிறது.

விரத நாளில் என்ன செய்ய வேண்டும்?

இந்த விரதம் தொடங்கும் நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை என இரண்டு வேலையும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைக்க வேண்டும். தீபங்கள் ஏற்றி, இனிப்பு சார்ந்த நைவேத்தியம் செய்து முருகனுக்கு படையலகா வைக்க வேண்டும்.

கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம்

முருகனிடம் அமர்ந்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் ஆகிய பாடல்களை துதித்து முருகனை வணங்க வேண்டும். மூன்று வேளையும் உணவு உண்ணாமலும் அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு கூட விரதம் இருக்கலாம்.

கோயிலுக்கு சென்று முருகனை வழிபாடு செய்துவிட்டு வரவும். முடிந்தால் ஒரு விளக்கு ஏற்றுவது சிறப்பாகும். சஷ்டி விரதத்தை அவருக்கு வைத்த நைவேத்தியம் சாப்பிட்டு முடித்து கொள்ள வேண்டும்.

எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது, கந்த சஷ்டி கவசம்.

கருப்பையில் குழந்தை

கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும். வசிஷ்ட முனிவரிடம் இருந்து இவ்விரதத்தை பற்றி அறிந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி, முனிவர்கள், தேவர்கள் என பலரும் கடைபிடித்து உள்ளனர். 'செகமாயை உற்று' என்று தொடங்கும். சுவாமி மலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்த திருப்புகழை தினமும் பாராயணம் செய்தால் நல்ல குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம். கந்த சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை தரிசனம் செய்தால் நோய்கள், கடன் பிரச்னைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்