சங்கடங்கள் தீர வேண்டுமா? சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பாருங்க? - முழு விவரம் உள்ளே
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சங்கடங்கள் தீர வேண்டுமா? சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பாருங்க? - முழு விவரம் உள்ளே

சங்கடங்கள் தீர வேண்டுமா? சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பாருங்க? - முழு விவரம் உள்ளே

Aarthi Balaji HT Tamil
Published Apr 16, 2025 10:22 AM IST

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம்.

சங்கடங்கள் தீர வேண்டுமா? சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பாருங்க? - முழு விவரம் உள்ளே
சங்கடங்கள் தீர வேண்டுமா? சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பாருங்க? - முழு விவரம் உள்ளே

இது போன்ற போட்டோக்கள்

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி அணைத்து காரியங்களும் வெற்றியடையும்.

விரதம் இருப்பது எப்படி?

  • சதுர்த்தியன்று அதிகாலையில் நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணபதியின் நினைவோடு உணவு, பானங்களை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழச்சாறு அருந்தி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
  • விநாயகர் அகவல், விநாயகர் கவசம், சங்கடஹர சதுர்த்தி ஸ்தோத்திரம் போன்றவற்றை படிக்கலாம்.
  • விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
  • சதுர்த்தியன்று மாலை வேளையில் ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.
  • விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானது.அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஏப்ரல் 16 உங்களுக்கு சூப்பரா? சுமாரா?

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் என்ன நன்மை நடக்கும்

  • எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் அகலும்
  • எந்த ஒரு புதிய முயற்சியும் தடையின்றி வெற்றிகரமாக முடியும்.
  • வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்கள், கஷ்டங்கள் மற்றும் தடைகள் விலகும்
  • மனக்குழப்பங்கள் நீங்கி அமைதியான மனநிலை ஏற்படும்
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும்
  • நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கும்

இதையும் படிங்க: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஏப்ரல் 16 உங்களுக்கு சூப்பரா? சுமாரா?

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Aarthi Balaji

TwittereMail
ஆர்த்தி பாலாஜி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 7+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு, ஆன்மிகம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள இவர், டாப் தமிழ் நியூஸ், சமயம் தமிழ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்