தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sashtanga Dosham : சஷ்டாங்க தோஷம் என்றால் என்ன? யார் கவனமாக இருக்க வேண்டும்.. இதோ முழு விவரம்!

Sashtanga Dosham : சஷ்டாங்க தோஷம் என்றால் என்ன? யார் கவனமாக இருக்க வேண்டும்.. இதோ முழு விவரம்!

Divya Sekar HT Tamil
Jun 18, 2024 02:05 PM IST

Sashtanga Dosham : ஆண், பெண் ராசிகள் ஒன்றுக்கு ஒன்று ஆறு எட்டாக இடத்தில் வந்தால் அது சஷ்டாங்க தோஷம். உதாரணத்திற்கு கன்னி ராசிக்கு மேஷம் எட்டாவது ராசியாக வரும். மேஷத்திலிருந்து எண்ணிப் பார்த்தால் கன்னி ஆறாவது ராசியாக வரும். இப்படி ராசியிலிருந்து ஒரு ராசி ஆறாக அல்லது 8 ஆக வந்தால் அது சஷ்டாங்க தோஷம்.

சஷ்டாங்க தோஷம் என்றால் என்ன? யார் கவனமாக இருக்க வேண்டும்.. இதோ முழு விவரம்!
சஷ்டாங்க தோஷம் என்றால் என்ன? யார் கவனமாக இருக்க வேண்டும்.. இதோ முழு விவரம்!

பத்து விதமான திருமண பொருத்தத்தில் ராசி பொருத்தமும் ஒன்று. அந்த ராசி பொருத்தத்தில் ஆண் பெண் ராசிகள் ஒன்றுக்கு ஒன்று ஆறு எட்டாக வந்தால் அதை சஷ்டாங்க தோஷம் என்று சொல்வதுண்டு.

அதாவது ஆணோ பெண்ணோ ஒரு ராசியில் பிறந்து அது எந்த ராசி வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த ராசிக்கு ஆறாம் அல்லது எட்டாம் ராசியாக கவனிக்கவும். பொருத்தம் பார்க்கும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆறாம், எட்டாம் இடமாக வந்தால் அது சஷ்டாங்க தோசம்.

ராசி, லக்னம்

ஒரு முடிவுக்கு வர முடியாத விஷயத்தை ப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது நாம் கேட்பது வழக்கம். அதுபோல தான் ராசி சொல்லும் பலனும், பிறந்த லக்னம் சொல்லும் பலனும்.

ராசி மனசுனு சொல்லுவாங்க, உடம்புன்னு சொல்லுவாங்க மனது என்றால் சிந்தனை, லக்கனமும் அப்படித்தான் அதுவும் சிந்தனையை தனி மனித குணாதிசயங்களை சொல்லும். இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் ராசி லக்னம் இரண்டையும் பார்த்து தான் பொருத்தம் பார்க்கிறோம்.

ராசியை வைத்து 10 பொருத்தம் பார்த்தால் லக்னத்தை வைத்து புத்திரப்பேறு, விக்ரக அமைப்பு இப்படி நிறைய பார்க்கிறோம்.

சஷ்டாங்க தோஷம்

ஆண், பெண் ராசிகள் ஒன்றுக்கு ஒன்று ஆறு எட்டாக இடத்தில் வந்தால் அது சஷ்டாங்க தோஷம். உதாரணத்திற்கு கன்னி ராசிக்கு மேஷம் எட்டாவது ராசியாக வரும். மேஷத்திலிருந்து எண்ணிப் பார்த்தால் கன்னி ஆறாவது ராசியாக வரும். இப்படி ஒரு ராசியிலிருந்து ஒரு ராசி ஆறாக அல்லது 8 ஆக வந்தால் அது சஷ்டாங்க தோஷம்.

சஷ்டாங்க தோஷம் என்ன செய்யும்

இந்த தோஷம் வந்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை இருக்காதாம். சந்தேகம் இருக்குமாம் அதேபோல ரகசியங்கள் அதிகமாக இருக்குமாம். ஆறுக்கு ஒழிக்க தெரியாது எட்டுக்கு வெளிப்படை தன்மை இருக்காது.

விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஆறு என்றால் ரணரோக சத்ரு என்று சொல்வார்கள். இது ராசி என்றாலும் லக்னம் என்றாலும் ஆறு என்றாலே ரணரோக சத்ரு தான். ரணம் என்றால் காயம் ரோகம் என்றால் நோய் சத்ரு என்றால் எதிரி. காயத்தையோ நோயையோ எதிரியையும் நம்மால் மறைக்க முடியாது. எப்படியாவது அது வெளிப்பட்டே தீரும். 

அதுபோல தான் ஆறாம் இடம் பகை என்பதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, வார்த்தை மோதல்கள் அவ்வபோது வெளிபட்டு விடும். வெளிப்படுவது என்றால் கணவன் மனைவி ஒற்றுமை குறையும் என்று அர்த்தம். இது ஒருவர் பிறந்த ராசிக்கு ஆறாவது ராசியாக இருந்தால் இந்த பலன்கள் பொருந்தும்.

இவர்களுக்கு பிரச்சனை இல்லை

அதுவே ஒருவர் பிறந்த ராசியில் இருந்து எட்டாவது ராசியாக இருந்தால் வெளிப்படையாக சொல்லாத ரகசியங்கள் நிறைய இருக்கும். வெளிப்படையாக சொல்லாமல் பகிர்ந்து கொள்ளாமல் நிறைய விஷயங்களை தானாகவே முடிவெடுத்து செய்வார்கள் இதனால் கணவன் மனைவியிடையே அதிக பிரச்சனைகள் என வாய்ப்பு இருக்கிறது.

இதில் சில விதிவிலக்குகள் இருக்கிறது அதாவது மேஷ ராசிக்கு விருச்சிகம் விருச்சிக ராசிக்கு மேஷம் ஆறாம் இடம் எட்டாம் இடமாக வரும் இரண்டுக்கும் அதிபதியாய் செவ்வாய் வருவதால் சஷ்டாங்க தோஷம் பெரிது படுத்த வேண்டியதில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்