How To Find Laknam: உங்கள் ராசி தெரியும்! லக்னம் தெரியுமா? லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி?-what is lagna in astrology and how to find it - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  How To Find Laknam: உங்கள் ராசி தெரியும்! லக்னம் தெரியுமா? லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி?

How To Find Laknam: உங்கள் ராசி தெரியும்! லக்னம் தெரியுமா? லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி?

Kathiravan V HT Tamil
Mar 12, 2024 04:33 PM IST

”How To Find Laknam: நீங்கள் ராசியை எந்த அளவுக்கு ஞாபகம் வைத்துள்ளீர்களோ அதே அளவுக்கு லக்னத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது அவசியம். இந்த 12 லக்னங்களுக்கும் ராகு, கேது நீங்களாக 7 கிரகங்களும் அதிபதிகளாக வருவார்கள்”

சூரியனை மையப்படுத்தி லக்னம் கணக்கிடப்படுகிறது
சூரியனை மையப்படுத்தி லக்னம் கணக்கிடப்படுகிறது

ராசியை விட லக்னம் முக்க்கியம் 

ஒருவர் தன் தாயின் கருவறையை விட்டு இந்த பூமிக்கு வரும் நேரமே லக்கினம் லக்னம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.  ஒருவரது ஜாதத்தில் முதலில் லக்கினத்தை ஒன்றாம் இடமாக கணக்கிட்ட பிறகுதான் கிரகங்களின் நிலையை குறிக்க ஜோதிட கட்டத்தை போடுகின்றனர். ஒருவருக்கு ராசி எப்படி முக்கியமோ அதைவிட லக்கினம் முக்கியம் என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது. 

ராசியும், லக்னமும்! 

ஒரு ஜாதகத்தில் இரண்டு இயங்கு புள்ளிகள் உள்ளன. இவை லக்னம் என்றும் ராசி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோச்சார நிலையில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாதப்பலன்கள் ஆகியவை ராசியை மையம் வைத்தே செல்லப்படுவதால் அதனை அறிந்து கொள்ள ராசி உதவுகிறது. 

சந்திரன் இருப்பிடத்தை வைத்து நட்சத்திரம் சொல்லப்படுவதால் ஆலய பரிகாரங்கள் செய்து கொள்ள ராசியும் நட்சத்திரமும் உதவுகிறது. மேலும் ராசியை மையம் வைத்து வரும் யோக பலன்கள் அறிய ராசியின் பயன்பாடு ஜோதிடத்தில் முக்கியமான ஒன்றாக உள்ளது. 

வாழ்கையை கணிக்க உதவும் லக்னம்!

ஆனால் ஒருவரது ஜாதகத்தில் லக்னம்தான் ஜாதகரின் சகல அம்சங்கள் எனப்படும் ஆரோக்கியம், பொருளாதாரம், சொத்துக்கள், சகோதரநிலை, தயார், குழந்தைகள், மனைவி, நோய், கடன், திருமணம், ஆயுள், கண்டம், தொழில், லாபம், விரையும் ஆகியவற்றை வைத்து கணிக்க காரணமாக அமைகிறது. 

பூமி சுற்றும் நேரம்!

பூமி தினமும் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன், 365 நாட்களுக்கு ஒருமுறை தனது நீள்வட்ட பாதையையும் சுற்றி வருகிறது. ஒவ்வொரு ஜாதகருக்கும் உள்ள பிறந்தநாள், பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய காரணிகளை கொண்டு லக்னம் கணிக்கப்படுகிறது. 

ஒரு மனிதனின் ஆத்மா செய்த பாவ புண்ணிய காரியங்களை இந்த பிறவியில் தீர்த்துக் கொள்வதற்காக பிறப்பெடுக்கும் இடமே லக்னம் எனப்படுகிறது. லக்னத்தை வைத்துதான் ஒருவரின் குணநலன்களையும், அவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளையும் கணிக்க முடியும்.  

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பயணிப்பார், சித்திரை மாதம் மேஷ ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீன ராசியில் தனது பயணத்தை முடிக்கிறார். பூமி 365 நாட்கள் தனது நீள்வட்டப்பாதையை சுற்றி வரும் கணக்குதான் சூரியன் 12 ராசிகளையும் சுற்றி வரும் கணக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

சூரிய உதயமும், லக்னமும்!

பூமி தன்னைத்தானே தினமும் சுற்றிக் கொள்வதால் சூரியன் ஒளியானது 12 ராசி மண்டலங்களிலும் விழும். இதன் அடிப்படையில் பிறந்த இடத்தின் சூரிய உதயத்தை கணக்கீடு செய்து லக்னம் கணிக்கப்படுகிறது. 

ஒரு ராசி மண்டலம் என்பது 30 டிகிரி, 12 ராசிகளையும் சேர்த்து 360 டிகிரியாக கணக்கில் கொள்ளப்படுகிறது. நீங்கள் பிறந்த நேரத்தில் எந்த ராசி மண்டலத்தில் சூரியன் ஒளி குவிக்கப்படுகிறதோ அதனை வைத்தே லக்னம் கணக்கீடு செய்யப்படுகிறது. 

ஸ்தானங்கள் 

சூரியன் ஆத்மகாரகன், நமது ஆன்மா அழிவு இல்லாதது, பல பிறவிகள் தொடர்ந்து வரக்கூடியது. இந்த லக்னத்தில் இருந்துதான் 2ஆம் இடம் தன ஸ்தானம், 3ஆம் இடம் சகோதர ஸ்தானம், 4ஆம் இடம் சுக ஸ்தானம், 5 புத்தர ஸ்தானம், 6 ஆம் இடம் எதிரி ஸ்தானம், 7 ஆம் இடம் மனைவி ஸ்தானம், 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானம். 9ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் போன்றவைகள் கணிக்கப்படுகிறது. 

லக்ன அதிபதிகள்!

நீங்கள் ராசியை எந்த அளவுக்கு ஞாபகம் வைத்துள்ளீர்களோ அதே அளவுக்கு லக்னத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது அவசியம். இந்த 12 லக்னங்களுக்கும் ராகு, கேது நீங்களாக 7 கிரகங்களும் அதிபதிகளாக வருவார்கள். சூரியன், சந்திரனுக்கு தலா ஒரு லக்னத்திலும், மற்ற 5 கிரகங்களுக்கு  தலா 2 லக்னத்திலும் அதிபதிகளாக உள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்