Kala Sarpa Dosham : கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? புத்தி தடுமாற்றம் அதிகமாக இருக்குமாம்.. இதோ முழு விவரம்!
Kala Sarpa Dosham : கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால் என்ன பலன்? என்பது குறித்து பார்க்கலாம்.

நிழல் கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவுக்கு இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், விழாயன், வெள்ளி, சனி ஆகிய கிரங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும்.காலசர்ப்ப யோகம் உள்ளவர்களுக்கு வாழ்கையின் முற்பகுதி சிரமங்களை தந்தாலும் பிற்பகுதி சிறப்பான யோகங்களை தரும்.
ராகு இரண்டில் இருந்தாலும் அல்லது எட்டில் இருந்தாலோ அது தோஷம் என்று சொல்ல முடியாது. ராகு இரண்டிலிருந்து கேது எட்டில் இருந்தும் மற்ற கிரகங்கள் இதற்குள் இருந்தால் அது கால சர்ப்ப தோஷம்.
உங்கள் ஜாதகம் நன்றாக இருந்தாலும் யாராவது ஒருவர் இந்த மாதிரி தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அது தோஷ ஜாதகம் என்று நீங்கள் முடிவு எடுக்க வேண்டாம்.
கால சர்ப்ப தோஷம் ராகு கேது உள்ளே இந்த கிரகங்களின் அமைப்பு இருக்கும்போது ஒரு மனிதனுக்கு புத்தி தடுமாற்றம் என்பது அதிகமாக இருக்கும். ஒரு சரியான முடிவை எடுக்க மாட்டார்கள். முடிவு எடுக்க வேண்டும் என்றால் அதில் அவர்களுக்கு நிறைய குழப்பம் இருக்கும்.
கால சர்ப்ப தோஷம் ஜாதகங்களுக்கு யோகங்களும் உண்டு. வயதிற்கு மேல் அவர்களுக்கு நல்ல யோகம் இருக்கும். ராகு சனியோடு சேர்ந்து இருந்தால் அவர்கள் மிகவும் பிரபலமாக இருப்பார்கள். ராகு கேது கஷ்டங்களை கொடுக்கக்கூடிய கிரகம். ராகு சனியோடு இருந்தாலே கஷ்டம் என்பது கிடையாது.
ராகு கேது இரண்டு கிரகங்களும் நம்முடைய பாவ புண்ணியத்தை தீர்மானம் செய்பவர்கள். ராகு பகவான் உலக அளவில் பெரிய புகழை கொடுத்து பின்னர் ஏழரை சனி வந்தவுடன் அவர் தன் வேலையை காட்ட ஆரம்பிப்பார்.
நமக்கு எந்த காலகட்டத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை ராகு, கேது, சனி மூவரும் தான் தீர்மானம் செய்வார்கள். நம்ம பூர்வ ஜென்ம கர்ம பலன்களையும், இப்போ இருக்கக்கூடிய இந்த ஜென்மத்தினுடைய கர்மபலனையும் நிர்ணயிக்கிறவங்க இந்த மூவர் தான்.
கேது பகவானே ஞானக்காலத்தான் என்று சொல்வோம். இந்த ஞானம் நமக்கு எப்போது வரும் என்றால் நாம் ஒரு விஷயத்தில் அடிபடும் போது ஒரு ஞானம் நமக்கு பிறக்கும். கேது திசை என்பது ஒரு மனிதனை பக்குவப்படுத்தும். ராகு திசை என்பது அனைத்தையும் காண்பித்து விட்டு அனைத்தையும் அவரே திரும்ப பெற்றுவிடுவார். நாம் என்ன மாதிரியான பாவம் பண்ணி இருக்கிறோம் என்ன மாதிரியான புண்ணியம் பண்ணி இருக்கிறோம் இதை பொறுத்துதான் நமக்கு பலன்கள் கிடைக்கும்.
சூரியன் வீட்டில் ராகு 18 வருடங்கள் இருந்தால் அப்பாவுக்கு பகையாக இருப்பார். தந்தை அறிவுரை கூறினால் பையன் அதற்கு நேர்மறையாக தான் செய்வான். இந்தக் கால சர்ப்ப தோஷம் திருமணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே அதைக் கண்டு நாம் பயப்பட தேவையில்லை. பருவ வயதில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் ராகு முக்கிய பங்கு வகிக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்