Guru Suryan Serkai: மாயாஜாலம் நிகழ்த்தும் குரு சூரியன் சேர்க்கை… சிவராஜ யோகம் உறுதி.. எப்படியான பலன்கள் கிடைக்கும்?
Guru Suryan Serkai: சில கிரகங்களுடன் இணையும் போது, அது வேறு மாதிரியான பலன்களை கொடுக்கும். குருவுடன் சேர்ந்த கிரகங்கள் செய்யும் வேலையானது நிச்சயமாக மாயஜாலமாக இருக்கும். - குரு சூரியன் சேர்க்கை இணைவு பலன்கள்!

குரு - சூரியன் இணைவு கொடுக்கும் பலன்கள் பற்றி, பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதி லிங்கம் பேசி இருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
குரு - சூரியன் இணைவு
அவர் பேசும் போது, “ கிரங்கங்களில் முழு சுபராக அறியப்படகூடிய கிரகம் குரு. குரு அருள் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியம் ஆகும். குழந்தை ஜனனம், மனசாட்சியோடு நடந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றை குறிக்கும் கிரகமாக குரு வருகிறார். குரு எல்லா கிரகங்களுக்கும் நன்மை செய்யுமா என்றால் நிச்சயமாக கிடையாது.
சில கிரகங்களுடன் இணையும் போது, அது வேறு மாதிரியான பலன்களை கொடுக்கும். குருவுடன் சேர்ந்த கிரகங்கள் செய்யும் வேலையானது, நிச்சயமாக மாயஜாலமாக இருக்கும். குருவுடன் சூரியன் இணையும் போது, நிச்சயமாக சிவராஜ யோகம் கிடைக்கும். காலச்சக்கரத்திற்கு 5 ம் இடத்திற்கு உடையவர் சூரியன். காலச்சக்கரத்திற்கு 9 ற்கு உடையவர் குரு.
ஆன்மிக நாட்டம் அதிகமாக இருக்கும்.
இரண்டு பேரும் இணையும் போது, அந்த ஜாதககாரருக்கு இயல்பாகவே ஆன்மிக நாட்டம் அதிகமாக இருக்கும். உதவும் குணம் படைத்தவராக இருப்பார். மனசாட்சிக்கு பயந்தவராக இருப்பார். அதே சமயம் ஈகோவின் ஒட்டுமொத்த உருவமாக இருப்பார். சின்ன பிரச்சினை என்றாலும், சம்பந்தப்பட்ட நபரை அப்படியே வெட்டித்தூக்கி விடுவார்.
அன்னதானம், தானம் தர்மம் செய்தல் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடோடு இருப்பார்கள். இவர்கள் எங்கு இருக்கிறாரோ அங்கு முக்கியஸ்தராக இருப்பார்கள். அவர்களுடைய குழந்தைகளும், அதே போல அவர்களது பெற்றோரும் உயர்தரவரிசையில் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஜாதகத்தில் பாவிகள் தொடர்பு இருக்கக்கூடாது. பிறவை சரியாக அமைந்து விட்டால், இந்த பிறவி அவர்களுக்கு புகழ் தரும் பிறவியாக இருக்கும். பிரதோச வழிபாட்டை இவர்கள் தொடர்ந்து செய்து வரும் போது, அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டே போகும். மலைமேல் இருக்கும் சிவன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
---
குரு, செவ்வாய் இணைவு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பிரபல ஜோதிடரான அவிநாசி ஜோதிலிங்கம், பக்தி இன்ஃபினிட்டி சேனலுக்கு பேசி இருக்கிறார். அதையும் பார்க்கலாம்.
கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கும்
இது குறித்து அவர் பேசும் போது, “ குரு பகவான் காலச்சக்கரத்தில் ஒன்பதாம் இடத்தை குறிக்கும். செவ்வாய் பகவான் ஒன்றாம் இடத்தை குறிப்பவராக இருக்கிறார். குரு செவ்வாய் இணைந்து இருந்தால், அவருக்கு கட்டுமஸ்தான உடல் இருக்கும். வொர்க் அவுட், டயட் என இருந்து உடம்பை கட்டுமஸ்தாக பார்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். செவ்வாய் என்பது இரத்ததை குறிக்கும். குரு கொழுப்பை குறிக்கும். அதாவது கெட்ட கொழுப்பு.. ஆகையால் இவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆகையால், ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ந்து மருத்துவபரிசோதனையை எடுத்துக்கொள்வது இவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இவர்களிடம் மிகவும் மதிப்பு மிகுந்த வீடு, மனை என ஏதாவது நல்ல சொத்து கண்டிப்பாக இருக்கும். இவர்களுக்கு சகோதர பாசம் அதிகமாக இருக்கும். ஆனால் அவர்களிடம் இருந்து இவர்களுக்கு பெரும்பாலும் காயங்களே வந்து சேரும்.
மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டை கோயில் போல வைத்திருப்பார்கள். ஊர் பொதுகாரியம் என்றால் இவர்கள் முன்னால் வந்து நிற்பார்கள். இவர்களது குழந்தைகளும் நல்ல நிலையில் இருப்பார்கள். நேர்மையாக இருப்பார்கள். சமுதாயத்தில் ஒரு இடத்தை அடைய போராடிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு தலை சிறந்த ஆலயம் என்றால், அது திருச்செந்தூர் முருகன் ஆலயம் தான்.
இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன், கணவன் மனைவி உறவு அப்படியே கட் ஆகி விடும். வேலைப்பளு காரணமாக அந்த விஷயம் நடக்கும்.
அங்கு இவர்கள், இரவு நடக்கிற ஏதாந்த தரிசனும், மறுநாள் காலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனும் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, வாழ்க்கை செழிக்கும். இவர்கள் உணவுப் பிரியராக இருப்பார்கள். சுவை இல்லை என்றால் இவர்கள் சாப்பிடமாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் மைனஸ் என்னவென்றால், இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன், கணவன் மனைவி உறவு அப்படியே கட் ஆகி விடும். வேலைப்பளு காரணமாக அந்த விஷயம் நடக்கும்.” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்