பரணி தீபம் என்றால் என்ன.. தீபம் ஏற்றுவதற்காக நேரம்.. எமதர்மன் விளக்கமும்.. பரணி தீப காரணமும் இதோ!
பரணி தீபத்திற்கு குறைந்தது 5 அகல் தீபம் ஏற்ற வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் கார்த்திகை தீபத்தன்று ஏற்றுவது போல் வீட்டின் நிலை வாசல் தொடங்கி அனைத்து பகுதிகளிலும் ஏற்றலாம்.
கார்த்திகை மாதம் என்றாலே பலரின் நினைவுக்கு வருவது தீபம்தான். அறியாமல் செய்யும் பாவங்களில் இருந்து நமக்கு விடுதலை தரும் பரணி தீபம் குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி தனது ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
பரணி தீபம்
கடோபநிஷதம் என்ற நூலில் பேசப்பட்டுள்ளது பரணி தீபம். நசிகேதன் என்பவரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது. நசிகேதனின் தந்தை வேள்வி செய்யும் போது ஒவ்வொரு தேவர்களும் என்னவெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கேட்ட பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நசிகேதன் எல்லாருக்கும் தூக்கி கொடுக்கிறீர்களே என்னையும் யாராவது கேட்டால் கொடுத்து விடுவீர்களா என்று கேட்டார். அப்போது ஆமாம் உன்னையும் கொடுத்து விடுவேன் என்று சொல்லி எமனுக்கு தனது மகனை உயிரோடு தூக்கிக் கொடுத்து விட்டார்.
நேராக உயிரோடு எமலோகத்திற்கு சென்ற நசிகேதன் எமனிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். எங்க அப்பா என்னை கொடுத்துவிட்டார் என்பதால் இங்கு வந்து விட்டேன். இங்கு வந்து பார்த்தால் எவ்வளவு துன்பங்களை மக்கள் அனுபவிக்கிறார்கள். கீழேயும் துன்பம் மேலே வந்தால் இங்கேயும் துன்பமா என்று எமதர்மராஜாவிடம் கேட்கிறார்.
இதனால் எமதர்மராஜா தர்மங்கள் என்ன என்பதை நசிகேதனுக்கு எடுத்துரைத்தார். இவர்களெல்லாம் இங்கு இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் கீழே என்னென்ன பாவங்கள் செய்து இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியாது என்று சொல்லி ஒவ்வொர் வாழ்க்கையிலும் நடந்தை எடுத்து சொல்கிறார். இங்கிருப்பவர்கள் கீழே உணவில் எவ்வாறு கலப்படம் செய்தனர். அடுத்தவர்களை எப்படி கொடுமை செய்தனர் என்பது போன்று அவர்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை காட்டினார். இதை பார்த்த நசிகேதன் எல்லாம் சரிதான். ஆனால் மனிதர்களுக்கு இப்படி எல்லாம் செய்தால் அதற்கு எதிர் விளைவுகள் இப்படி இருக்கும் என்பது தெரியாதே. தெரியாமல் பலரும் தவறு செய்கிறார்களே ஒரு தப்பிற்கு தண்டனை என்று இருக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்தால் மனிதர்கள் தவறு செய்ய மாட்டார்களே கேட்கிறார்.
அதற்கு புராணங்கள், இதிகாசங்கள், பெரியவர்கள் சொல்கிறார்களே.. ஆனால் இதை மனிதர்கள் கேட்பதில்லையே ஒழுக்கமான வாழ்க்கையை கடைபிடிப்பதில்லையே என்று எமன் பதில் சொல்கிறார். இதைக்கேட்ட நசிகேதன் எல்லாம் சரிதான் ஆனால் நீங்கள் தர்மராஜா இல்லையா எமன் என்ற பெயரை கொஞ்சம் மறந்து விட்டு தர்மராஜா என்ற பெயரோடு கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன் எங்களைப் போன்ற எளிமையான மனிதர்கள் வாழ்வதற்கு ஏதாவது வழி சொல்லுங்களேன். இந்த எம வாதனையில் இருந்து மீள்வதற்கும் வாழும்போது நல்ல விஷயங்கள் நடப்பதற்கும் ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன் என்று கேட்கிறார்.அப்போது எம தர்ம ராஜா சொன்ன ஒரு விஷயம் தான் பரணி தீபம்
பரணி தீபம் ஏற்ற காரணம்
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தின் போது யார் ஒருவர் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அது அவர்களுக்கும், அவர்களுடைய முன்னோர்களுக்கும் அவர்களுடைய எதிர்கால சந்ததியினருக்கும் மேல் உலகத்தில் உண்டான நலன்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட நசிகேதன் எனக்கு அனுமதி கொடுங்கள் நீங்கள் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் நான் மக்களுக்கு சொல்கிறேன் என்று எம தர்மராஜன் அனுமதியை பெற்று அவர் எந்த பூலோகத்திற்கு வந்து சொன்ன பிறகுதான் மக்களுக்கும் தெரிகிறது. பரணி தீபம் என்ன செய்யும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அறியாமல் நான் செய்யும் பாவங்களில் இருந்து நமக்கு விடுதலை பெற்று தரும்.
பரணி தீபம் ஏற்றும் நேரம்
இந்த ஆண்டு பரணி தீபம் ஏற்றும் நேரம் குறித்து பார்க்கலாம்.
12.12.2024ல் காலை 8.20 மணி முதல் 13.12.2024 காலை 6.50 வரை பரணி நட்சத்திரம் இருக்கிறது. 12ம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
பரணி தீபத்திற்கு குறைந்தது 5 அகல் தீபம் ஏற்ற வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் கார்த்திகை தீபத்தன்று ஏற்றுவது போல் வீட்டின் நிலை வாசல் தொடங்கி அனைத்து பகுதிகளிலும் ஏற்றலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்