Kanavu Palangal : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? இப்படி கனவு வந்தால் மரணம் கூட வர வாய்ப்பு இருக்காம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kanavu Palangal : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? இப்படி கனவு வந்தால் மரணம் கூட வர வாய்ப்பு இருக்காம்!

Kanavu Palangal : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? இப்படி கனவு வந்தால் மரணம் கூட வர வாய்ப்பு இருக்காம்!

Divya Sekar HT Tamil
May 03, 2024 11:25 AM IST

Kanavu Palangal in Tamil : விபத்து தற்கொலை போன்ற துற்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். மேலும் அந்த கனவுகள் வந்து சென்ற பின் நமக்கு உடல் நலம் சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்

நமக்கு தெரிந்த சிலர் யாராவது இறந்துவிட்டது போல நமக்கு சில சமயங்களில் கனவு வரும். அவ்வாறு கனவுகள் வந்தால் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம். அதே போன்று இறந்து போனவர்களை நாம் சுமந்து தூக்கி செல்வது போன்ற கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேரும். அதேபோல ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் அது நமக்கு நல்லது கிடையாது. 

இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுதால் கோவிலுக்கு சென்று கடவுளுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. இறந்து போன தாய் அல்லது தந்தை கனவில் கண்டால் அவர்கள் தங்களது வருகையை எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று பொருள். எனவே தாய் அல்லது தந்தை இறந்து போன பிறகு நம் கனவில் வந்தால் நமக்கு ஏதோ ஆபத்து நிகழப் போகிறது என்று நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இயற்கையாகவே சிலர் மரணம் அடைந்திருப்பார்கள் அவ்வாறு இயற்கை மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்து பெரியோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசிர்வதிப்பது போல் பலனை தரும். எனவே நம் முன்னோர்கள் நம் கனவில் வருவது மிகவும் நல்லது தான். அவர்களின் ஆசி நமக்கு எப்போதும் உண்டு.

ஆனால் விபத்து தற்கொலை போன்ற துற்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். மேலும் அந்த கனவுகள் வந்து சென்ற பின் நமக்கு உடல் நலம் சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி உங்களுக்கு சில விபத்துக்கள் அல்லது குடும்பத்தில் தகராறு தேவையில்லாத வாக்குவாதம் மற்றும் சண்டை பிரிவு போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இது போன்ற சில தேவையற்ற கனவுகளை தவிர்க்க குலதெய்வ கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம் . அவ்வாறு குலதெய்வம் வழிபாட்டை மேற்கொள்ளும் போது நம் குடும்பத்துடன் சென்று அனைவரும் வேண்டி பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கினால் தேவையற்ற கனவுகள் மீண்டும் வராது. மேலும் வயதானவர்கள் பெரியவர்கள் மற்றும் வாழ்க்கை முழுவதும் சிறப்பு இயற்கை எழுதியவர்கள் ஆகியோர் நம் கனவில் வந்தால் கவலை கொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : Aalaya Magimai

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner