ப்ளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? ரிஷப ராசிக்கு மேன்மை தரும் படிப்புகள் எவை? ஜோதிடர் கூறுவது என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ப்ளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? ரிஷப ராசிக்கு மேன்மை தரும் படிப்புகள் எவை? ஜோதிடர் கூறுவது என்ன?

ப்ளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? ரிஷப ராசிக்கு மேன்மை தரும் படிப்புகள் எவை? ஜோதிடர் கூறுவது என்ன?

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 21, 2025 10:26 AM IST

ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஐஏஎஸ், ஐபிஎஸ், விவசாயம் தொடர்பான படிப்பு, உயிரியல், வரலாறு சார்ந்த படிப்புகள் படிப்பார்கள். மேலும் ஜோதிடர் சொல்வது என்ன?

ப்ளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? மேஷ ராசிக்கு மேன்மை தரும் படிப்புகள் எவை? ஜோதிடர் கூறுவது என்ன?
ப்ளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? மேஷ ராசிக்கு மேன்மை தரும் படிப்புகள் எவை? ஜோதிடர் கூறுவது என்ன?

இது போன்ற போட்டோக்கள்

ரிஷப ராசி மாணவர்களின் மேல்படிப்பு

பேஷன் டெக்னாலஜி, அழகு துறை சார்ந்த படிப்புகள், சினிமா துறை, தொலைக்காட்சி துறை படிப்புகளில் ஆர்வம் கொண்டவர்கள். விஷுவல் கம்யூனிகேஷன், கேமரா டெக்னாலஜி, கிராபிக்ஸ் டிசைனிங் படிப்புகளை விரும்பி படிப்பார்கள். மேலே சொன்ன படிப்புகளை படிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும், நிச்சயம் இந்த துறைகளில் தான் கால் படித்து வெற்றி கொடி நாட்டுவார்கள். இயல், இசை, நாடகம், நாட்டியத் துறையிலும் சாதிப்பார்கள்.

ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஐஏஎஸ், ஐபிஎஸ், விவசாயம் தொடர்பான படிப்பு, உயிரியல், வரலாறு சார்ந்த படிப்புகள் படிப்பார்கள்.

ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புள்ளியியல், தாவரவியல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் தொடர்பான படிப்புகள் படிப்பார்கள்.

மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சட்டம், ஐஏஎஸ், ஐபிஎஸ், பி.காம், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மருத்துவம், பி.பார்ம், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி சார்ந்த படிப்புகள் படிப்பார்கள்.

இதுதவிர அவரவர் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.

கட்டுரையாளர்: ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர், astrovenkataeswar@gmail.com, 91590 13118

பொறுப்புத் துறப்பு: இது ஜோதிட நிபுணரான கட்டுரையாளரால் வழங்கப்பட்ட தகவல். இதன் உண்மை தன்மைகளுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது. ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெறுவது உங்களின் சுய விருப்பத்தை பொருத்ததாகவும்.