தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Yamagandam : பார்த்து பக்குவமா இருங்க.. எமகண்டம் நேரத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன? இதோ பாருங்க!

Yamagandam : பார்த்து பக்குவமா இருங்க.. எமகண்டம் நேரத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Jun 18, 2024 11:39 AM IST

Time of Yamagandam : எமகண்டம் நேரத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பது பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

பார்த்து பக்குவமா இருங்க.. எமகண்டம் நேரத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன? இதோ பாருங்க!
பார்த்து பக்குவமா இருங்க.. எமகண்டம் நேரத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன? இதோ பாருங்க!

பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், எமகண்டம் பார்ப்பது பலரின் வழக்கமாக நமது நாட்டில் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும்.

செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

அப்படி எமகண்டம் நேரத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பது பற்றி இப்போது நாம் பார்க்கலாம். கேதுவோட நிழல் பூமியில் விழுகிற காலம் தான் எமகண்டம். அதேபோல ராகுவின் நிழல் பூமியில் வந்து படரும் காலம் பார்த்தோம்னா வந்து ராகு காலம். இந்த ராகு காலம் அப்படி இல்லன்னா எமகண்டத்தில் பூமியில் அநேகமான தீய காரியங்கள்தான் வந்து நடக்கும்.