தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Lagnam Career: ’மகர லக்னமா நீங்கள்?’ கோடிகளை குவிக்க செய்ய வேண்டிய தொழில்கள் இதோ!

Magaram Lagnam Career: ’மகர லக்னமா நீங்கள்?’ கோடிகளை குவிக்க செய்ய வேண்டிய தொழில்கள் இதோ!

Kathiravan V HT Tamil
May 21, 2024 07:00 AM IST

Magaram Lagnam: மகரம் லக்னத்தை பொறுத்தவரை தொழில் தொடர்பான வாய்ப்புகளை வழங்கும் 10ஆம் இடம் என்பது சுக்கிரன் அதிபதியாக இருக்கும் துலாம் ராசியாக வருகிறது. துலாம் ராசியில் சனி இருந்தால் உச்சம் அடைகிறார்.

’மகர லக்னமா நீங்கள்?’ கோடிகளை குவிக்க செய்ய வேண்டிய தொழில்கள் இதோ!
’மகர லக்னமா நீங்கள்?’ கோடிகளை குவிக்க செய்ய வேண்டிய தொழில்கள் இதோ!

மகரம் லக்னமும் தொழிலும்!

மகரம் லக்னத்தை பொறுத்தவரை தொழில் தொடர்பான வாய்ப்புகளை வழங்கும் 10ஆம் இடம் என்பது சுக்கிரன் அதிபதியாக இருக்கும் துலாம் ராசியாக வருகிறது. துலாம் ராசியில் சனி இருந்தால் உச்சம் அடைகிறார். சுக்கிரன் சனி பகவானுக்கு நட்பு கிரகம் என்பதால் கீழ்கண்ட தொழில்களை செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம் என ஜோதிடர் ஆலங்காயம் சுப்பிரமணியன் கூறுகிறார். 

ஏற்றுமதி இறக்குமதி தொழில்

மகரம் சர லக்னமாக வருகிறது என்பதால் இடப்பெயர்ச்சி தொடர்பான தொழில்களை செய்தால் வெற்றிகளை குவிக்க முடியும்.

உதாரணமாக ஏற்றுமதி இறங்குதி சார்ந்த தொழில்களை மகரம் லக்னத்தில் சார்ந்தவர்கள் செய்யலாம். குறிப்பாக உங்கள் 10ஆம் இடத்தின் அதிபதியாக சுக்கிரன் வருவதால் ஜவுளி பொருட்கள் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்லாம். இதுமட்டுமின்றி கடல் வர்த்தகமும் மகரம் ராசிக்காரகளுக்கு நன்மைகள் செய்வதாக அமையும்.

பூமி சம்பதப்பட்ட தொழில்

உங்கள் லக்னாதிபதி சனிக்கு உரிய பூமியில் இருந்து எடுக்கும் பொருட்களான இரும்பு, கிரானைட், நிலக்கரி, பெட்ரோல், மண் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யலாம். 

கட்டடங்கள் தொடர்பான தொழில்கள்

மேலும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தல், போட்டோ ஸ்டூடியோ, புகைப்படம் மற்றும் சினிமா சார்ந்த கருவிகள் விற்பனை, வாகனங்களை வாடகை விடுதல், கட்டடம் கட்டுவது தொடர்பான சாமான்களை வாடகைக்கு விடுதல், கட்டுமான பொருட்கள் சார்ந்த வாகனங்களை வாடகை விடுதல், கொரியர்,  லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட தொழில்களை செய்யலாம். 

சுற்றுலா தொடர்பான தொழில்கள்

மேலும் சுக்கிரனுக்கு தொடர்பு உடைய சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான தொழில்கள் செய்வதன் மூலமும் மகரம் ராசிக்காரர்கள் வெற்றி அடையலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

சுற்றுலா வழிகாட்டி தொழில், சுற்றுலா ஏற்பாட்டாளர் தொழில், சுற்றுலா வாகனங்கள் வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட தொழில்கள் இவர்களுக்கு கைக்கொடுக்கும். 

வீடு விற்பனை தொடர்பான தொழில்கள்

கட்டிய வீட்டை விற்பனை செய்வதல், வீட்டை கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட தொழில்கள், கட்டுமானம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் மகர ராசிக்காரர்கள் அமோக லாபத்தை ஈட்ட முடியும். 

பட்டாசு தொடர்பான தொழில்கள்

மேலும் பட்டாசுக்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சனி பகவான் உடன் தொடர்பு உடையவை. பண்டிகை காலங்களை சுக்கிரன் குறிப்பதால், பட்டாசு சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு கைக்கொடுக்கும். 

ஆடை அணிகலன்கள் சார்ந்த தொழில்கள்

மேலும் பெண்கள் விரும்பும் சேலைகள், அணிகலன்கள் சார்ந்த தொழில்களில் இவர்கள் ஈடுபடுவதன் மூலம் கணிசமான லாபங்களை இவர்கள் ஈட்டலாம். 

கலைத்துறை

கலைத்துறையான சினிமாவை பொறுத்தவரை சினிமா தயாரிப்பது, சினிமா எடுப்பது, சினிமாவில் நடிப்பது சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு நன்மைகள் செய்யும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel