2024 Zodiac Signs Sex Luck: ‘படுக்கையில் பரம திருப்தி’… 2024-ல் காம களியாட்டம் ஆடப்போகும் ராசிகள் யார் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2024 Zodiac Signs Sex Luck: ‘படுக்கையில் பரம திருப்தி’… 2024-ல் காம களியாட்டம் ஆடப்போகும் ராசிகள் யார் யார்?

2024 Zodiac Signs Sex Luck: ‘படுக்கையில் பரம திருப்தி’… 2024-ல் காம களியாட்டம் ஆடப்போகும் ராசிகள் யார் யார்?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 05, 2024 06:46 PM IST

விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை அவர்களுக்கு எப்போது காதல், காமம் செழித்து வளர்கிறதோ.. அப்போது அவர்களது வாழ்க்கையில் செழுமை மேலோங்கும்.

2024ம் ஆண்டில் காமத்தில் திருப்தி அடையும் ராசிகள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
2024ம் ஆண்டில் காமத்தில் திருப்தி அடையும் ராசிகள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

இது போன்ற போட்டோக்கள்

அதில் அவர் பேசும் போது, “மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக தைரியமாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். 2024ம் ஆண்டில், அவர்களது காம வாழ்க்கையானது, மிக மிக நன்றாக இருக்கும். அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள். 

இவர்கள், மிகவும் நெருக்கமாக காதலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொதுவாகவே தங்களுக்கான ஒரு சிறந்த இணையைத் தேடுவதில், மேஷராசிக்காரர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டில், பாலியியல் தேவையானது முழுமையாக திருப்தி பெறும். 

விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை அவர்களுக்கு எப்போது காதல், காமம் செழித்து வளர்கிறதோ.. அப்போது அவர்களது வாழ்க்கையில் செழுமை மேலோங்கும்.  

ஆகையால் உங்கள் இணையர் விருச்சிக ராசிக்காரராக இருக்கும் பட்சத்தில், அவருக்கு காமத்தை நீங்கள் வாரி வழங்குங்கள். காரணம், அவர்கள் இந்த ஆண்டு காம களியாட்டம் ஆடும் ஆண்டாக இருக்கிறது. இது, காதல், காமம், கல்யாணம் ஆகிய மூன்று உறவுகளில் உள்ளவர்களுக்கும் இது அப்படியே பொருந்திப்போகும்.  

சிம்மராசிக்காரர்களுக்கு இயல்பாகவே நன்றாக ரொமன்ஸ் வரும். அவர்கள் ரொமன்ஸ் செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்று கூட சொல்லலாம். ஆடம்பரமாக வாழ்வதோடு மட்டுமல்லாமல், விலையுயர்ந்த பரிசுகளையும் அவர்கள் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

பிறர் வாழ்கையில் இடம் பெறாத ரொமன்ஸ், நம் வாழ்க்கையில் இடம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். தாம்பத்தியத்திலும், அவர்கள் வெவ்வேறு விதமான அனுபவங்களை பெற முனைப்போடு இருப்பர். ஆகையால், இந்தாண்டு சிம்ம ராசிக்கான இணையர், அவர்களுக்கான முழுமையான காமத்தை கொடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

துலாம் ராசிக்காரர்கள் ராஜ தந்திரிகள்.  அவருக்கு தேவையான விஷயங்கள் தங்களது இணையரிடம் இருந்து கிடைக்கா விட்டால் அவர் மாற்று ஏற்பாட்டிற்கு ரெடியாகி விடுவார். ஆகையால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

2024ம் ஆண்டு காதல், பரஸ்பர அன்பு உள்ளிட்டவற்றை தன்னுடைய இணையருக்கு அவர் கொடுப்பார். கூடவே, படுக்கையறையிலும், அவர் தன்னுடைய இணையரிடம் இருந்து பாலின்பத்தை எதிர்பார்ப்பார். அதை அவரது இணையர் நிறைவேற்ற வேண்டும்.” என்று பேசினார்.

முன்னதாக, எந்தெந்த ராசிகளெல்லாம் அற்ப காம ராசிகள் என்பது குறித்து ஜோதிடர் ஆறு கணேசன் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார். அந்த தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 

அவர் பேசும் போது, “ஆண் பெண் சேர்க்கையானது முழுக்க முழுக்க மனதின் விளையாட்டே. இதில், உடலின் தேவை என்பது அதிகபட்சமாக வராது. நீங்கள் வேறு விஷயத்தில், உங்களது முழு கவனத்தையும் செலுத்தி, அதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள் என்றால், காமம் சம்பந்தமான தொந்தரவுகள் உங்களுக்கு பெரிதளவு இருக்காது.

காமத்தில் நாம் நம்முடைய மனதை இழந்து விடுகிறோம். அதன் காரணமாக அந்த இடத்தில் ஒரு மிருகம் போல நாம் மாறி விடுகிறோம். காமத்தை பொறுத்தவரை, அங்கு சந்திரனுடைய வலிமையே முக்கியம். காரணம் சந்திரன் என்றாலே, அன்பு, பாசம்!

அதில், செவ்வாய் இணையும் பொழுது, அது அதிதீவிரமாக மாறும். காரணம், செவ்வாய் என்பது வேகம் மற்றும் கோபம் கொண்ட கோள் ஆகும். அதனுடன் சுக்கிரனும் சேருகிறது என்றால், அது இன்னும் அதிகமாக தீவிரமடையும்.

ஒருவருக்கு காதல் கல்யாணம் நிகழ வேண்டும் என்றால், அவர்களுக்கு சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோரின் தொடர்பு இருக்க வேண்டும். சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமையாக இருந்தால், அந்த நபர் காதலில் அதிக அளவு ஈடுபாடு கொண்டவராக இருப்பார். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்தால், அவர் தீவிர காமப் பிரியனாக மாறுவார்.

சம்ந்தப்பட்ட நபர், ஒருவருடன் அதீத காமத்தோடு இருப்பாரா அல்லது பல பேருடன் அதீத காமத்தோடு இருப்பாரா என்பதை, அவர்களது ஜாதகத்தில் உள்ள கோள்களின் இணைவு மற்றும் பாவங்களில் படக்கூடிய பார்வை, உள்ளிட்டவற்றை வைத்தே கணித்து சொல்ல முடியும். ஆணுக்கு உடல் அடங்கிவிடும். பெண்ணுக்கு மனம் அடங்காது.

அற்ப ராசிகள் என்றால், அதில் முதலில் வருவது மிதுன ராசிதான். அந்த ராசிக்கு செவ்வாய் 6 மற்றும் 11 ம் இடங்களுக்கு உரியவனாக மாறி விடுகிறான். சுக்கிரன் 5 மற்றும் 12ஆம் இடங்களுக்கு உரியவனாக மாறிவிடுகிறான்.

ஆகையால் அவர்கள் இன்ன பிற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள், அவர்களின் உடல் தேவைக்கு ஏதாவது செய்து கொள்வார்களே தவிர, தன்னுடைய பார்ட்னருக்கு பெரிதாக மரியாதை கொடுக்க மாட்டார்கள்.

துலாம் ராசியை பொருத்தவரை, அதனின் 3ம் இடத்திற்கு அதிபதி குரு பகவான். அவர் அறிவுக்குரிய கோள். 7ம் இடத்து அதிபதி செவ்வாய். செவ்வாய் காமத்திற்கானதாக பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு காம உணர்வுகள் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. காரணம் இவர்கள், இன்ன பிற லட்சியங்களில், அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்கள், தொழில், மரியாதை, வருமானம் உள்ளிட்டவற்றில் சீர்தூக்கி பார்க்கக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் அவர்கள் பார்ட்னரிடம் பெரிதாக ஈடுபாடு காண்பிக்க மாட்டார்கள்

கும்ப ராசியும் அற்ப காமராசிகளில் தான் வரும். அந்த ராசியின் மூன்றாம் இடத்து அதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். அதனால் இவர்களுக்கு காமமானது இருந்தாலும், அது வேறு விதமாக மாறும். கும்ப ராசியைப் பொருத்தவரை, 3 ம் இடத்தில் செவ்வாயும், 7ம் இடத்தில் சூரியனும் வருகிறார்கள்.

11ம் இடத்தில் குரு வருகிறார். இவர்களுக்கு, பெரியோர்கள் நம்மை மதிக்க வேண்டும்; சமுதாயத்தில் உயர் பதவியில் இருக்க வேண்டும், உள்ளிட்ட எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அதில் அவர்கள் தீவிரமாக இருப்பார்கள். ஆகையால் இவர்களும் பெரிதாக காமத்தில் ஈடுபாடு காட்டமாட்டர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்