House Luck Rasis: சிம்மாசனத்தில் அமர்ந்த குரு; சொந்த வீடு கட்டும் யோகம்.. ஜாக்பாட் பெற்ற ராசிகள் யார் யார்?
இரண்டாம் வீடு என்பது குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அவர் அங்கு செல்வதால், குடும்பத்திற்கு என்று சொல்லி, ஒரு வீடு அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வீட்டை, உங்களுடைய குடும்பத்தின் உதவி கொண்டே நீங்கள் கட்டி முடிப்பீர்கள்.
2024ம் ஆண்டு யாருக்கெல்லாம் சொந்த வீடு அமையும் என்பது குறித்து ஜோதிடர் சிம்மா தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருந்தார். அந்த தகவல்கள் இங்கே!
அவர் பேசும் போது, “மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்திற்கு சொந்தமானவர்களுக்கு, குரு பகவானின் அருளானது, இந்த ஆண்டு முழுவதும் இருக்கிறது. குரு பகவான் பெயர்ச்சி ஆகி உங்களுடைய இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறார்.
இரண்டாம் வீடு என்பது குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அவர் அங்கு செல்வதால், குடும்பத்திற்கு என்று சொல்லி, ஒரு வீடு அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வீட்டை, உங்களுடைய குடும்பத்தின் உதவி கொண்டே நீங்கள் கட்டி முடிப்பீர்கள்.
ரிஷபம் ராசி மற்றும் ரிஷப லக்னக்காரர்களுக்கு இந்தாண்டு அதிகப்படியாக சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய ராசிப்படி, போக காரகன் என்று சொல்லக்கூடிய ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த வருஷம் முழுக்கவே அவர் அந்த கட்டத்தில் பயணிக்கிறார். ஆகையால் இந்த வருடத்தில் ரிஷப ராசிக்காரர்கள், சந்தோஷத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. காரணம், ராகு உங்களுக்கு உறுதுணை நிற்பார்.
மிதுன ராசிக்காரர்களுக்கும், மிதுன லக்னக்காரர்களுக்கும், அதிகப்படியாக சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுவாகவே எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வையாக இருக்கும்.
ஆனால் குருவுக்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக ஐந்தாம் பார்வை மற்றும் ஒன்பதாம் பார்வையாக சேர்ந்து இருக்கும். இவர் மிதுனத்தின் நான்காம் வீட்டை, ரிஷபத்தில் இருந்து பார்ப்பார். அப்படி பார்க்கும் பொழுது, நிச்சயமாக மிதுன ராசி மற்றும் மிதுன லக்னக்காரர்களுக்கு வாழ்க்கையில் சுகம் ஏற்படும். இந்த காலத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அமையும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த மாதத்திற்கு பிறகு, சொந்த வீடு கட்டுவதற்கான யோகமானது அமையும். அதற்கு குரு பகவான் முழுமையாக உறுதுணையாக இருப்பார். இதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம்.
விருச்சிக ராசி காரர்களுக்கும், சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது. குருவினுடைய ஏழாம் பார்வை உங்களுடைய ராசியின் மீதே விழுகிறது. இதை சம சப்தம பார்வை என்று சொல்கிறோம். இது உங்கள் மீது விழுவதால், நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியும் வெற்றியாகவே அமையும். சொந்தமாக வீடு வாங்குவதற்கு, நிலம் வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு முயற்சி எடுக்கும் பட்சத்தில் அது நிறைவேறும்.
கும்ப ராசிக்காரர்களுக்கும், கும்ப லக்னக்காரர்களுக்கும் இந்த காலகட்டத்தில் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால், உங்கள் ராசிப்படி, குருவின் ஒன்பதாம் பார்வை சுப ஸ்தானத்தில் விழுகிறது. காரணம் குருவின் உடைய ஆதரவு உங்களுக்கு இருக்கிறது” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்