Lucky Zodiac Signs: திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் பெண் ராசிகள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Zodiac Signs: திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் பெண் ராசிகள் என்னென்ன?

Lucky Zodiac Signs: திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் பெண் ராசிகள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
Published Apr 11, 2025 12:54 PM IST

Lucky Zodiac Signs: சில ராசிகளைச் சேர்ந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தேடி கொடுப்பார்கள்.

Lucky Zodiac Signs: திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் பெண் ராசிகள் என்னென்ன?
Lucky Zodiac Signs: திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் பெண் ராசிகள் என்னென்ன?

இது போன்ற போட்டோக்கள்

ரிஷபம்

ரிஷப ராசி கொண்ட பெண்கள் தங்கள் கணவர்களுக்கு செல்வத்தின் அடிப்படையில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவார்கள். இந்த ராசி சுக்கிரனால் ஆளப்படுகிறது. ரிஷப ராசி பெண்கள் தங்கள் கணவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவார்கள். கணவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். இந்த ராசிப் பெண்கள் எங்கு பணத்தைச் செலவிட வேண்டும், எங்கு செலவிடக்கூடாது என்பதை நன்கு அறிவார்கள். அவர்கள் பணத்தை நன்றாகச் சேமித்து வீணான செலவுகளைத் தவிர்க்கிறார்கள்.

கடகம்

கடக ராசிப் பெண்கள் மிகவும் அன்பானவர்கள். வீட்டை நன்றாகப் பராமரிப்பார்கள். அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது இவர்களுக்கு கை வந்த கலை. கணவனே தனது உலகம் என்று நினைத்து வாழ்ந்து வருவார்கள். கணவன் வாழ்க்கையில் நுழையும் போது செல்வத்தைக் கொண்டு வருவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசி பெண்கள் மிகவும் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தங்களின் ஆளுமை மூலமாக மாமியார் மற்றும் உறவினர்களைக் கவர்ந்து கையில் வைத்து கொள்வார்கள். தங்கள் கணவர்களை நன்றாக கவனித்து கொள்வார்கள். எந்த ஒரு பிரச்னையையும், துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள். அவர்கள் குடும்பத்தை எல்லா வகையிலும் ஆதரிப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், தவறவிட வேண்டாம் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

கும்பம்

கும்ப ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இயற்கையாகவே, இந்த ராசி பெண்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் எல்லோருடனும் நன்றாகப் பழகுவார்கள், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள். இந்த ராசி பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஆண்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஆன்மீகம் மற்றும் உணர்ச்சி ரீதியானவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் ஆதரிப்பார்கள். கடினமாக உழைத்து நல்ல அதிர்ஷ்டத்தை கொடுப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Aarthi Balaji

TwittereMail
ஆர்த்தி பாலாஜி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 7+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு, ஆன்மிகம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள இவர், டாப் தமிழ் நியூஸ், சமயம் தமிழ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்