Rahu Ketu Dosha: ராகு கேது தோஷம்.. பார்த்து பழகி பழிவாங்குவது ஏன்? சர்ப்ப சாந்தி பரிகாரம் பலன் தருமா?
பொதுவாக சர்பதோசம் அல்லது நாகதோஷம் ஜாதகத்தில் இருந்தால், அது அந்த ஜாதகக்காரருக்கு ஒரு விதமான தீமையை செய்யும். ஆகையால் நாக தோஷம் உங்களுக்கு இருந்தால், சிவன் கோயில்களுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரத்தை செய்யலாம்
ராகு கேது தோஷம் இருக்குமானால் பாம்புகள் பழி வாங்குமா, கல்யாண பொருத்தத்தில் அதன் பங்கு என்ன? அதை போக்குவது எப்படி உள்ளிட்ட விபரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இது குறித்து பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் தன்னுடைய வராஹி ஜோதிடம் யூடியூப் சேனலில் பேசும்பொழுது, “பொதுவாக ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவை சர்ப்பங்கள் என்று சொல்வோம் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது, லக்னத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது அல்லது லக்னத்தில் கேது, ஏழாம் இடத்தில் ராகு, லக்னத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் கேது, எட்டாம் இடத்தில் ராகு; இப்படியான ஒரு அமைப்பு ஜாதகத்தில் அமையப்பெற்றால், அதனை நாக தோஷம் பெற்ற ஜாதகம் அல்லது சர்ப்ப தோஷ பெற்ற ஜாதகம் என்று நாம் அழைக்கிறோம். சிலர் 5-ம் இடத்தில் ராகு மற்றும் கேது இருந்தாலும், அதை சர்ப்ப தோஷமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.
இந்த ராகு கேது பொருத்தத்தை பொருத்தவரையில், இதை கல்யாண பொருத்தத்திற்குள்ளும் நுழைத்து பார்க்கிறார்கள் அதாவது, ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால், அதே போல ராகு கேது தோஷம் வரும் படியான வரனைத்தான் இதனுடன் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ராகு கேது தோஷம் உண்மையா?
இது உண்மையா என்றால் நிச்சயமாக அது உண்மைதான். அப்படி இல்லாமல் நாம் மாறாக இணைக்கும் பட்சத்தில், அவர்கள் மனரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஒருவருடைய உணர்வானது இன்னொருவருக்கு புரியாமல் சென்று விடுகிறது. இதனால் அவர்களுக்குள் நல்ல வாழ்க்கையானது அமைவது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. ஆகையால் ராகு கேதுவால் உருவாகும் தோஷங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த ராகு கேது இடங்களை பார்க்கும் போது, அவர்கள் அந்த ஜாதகக்காரருக்கு நன்மை செய்கிறார்களா? எந்த இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்? குருவின் பார்வை அவர்களின் மீது விழுகிறதா ? அதனால் என்ன நன்மை என்ன தீமைகள் உள்ளிட்டவற்றை நாம் பார்க்க வேண்டும்.
பொதுவாக சர்பதோசம் அல்லது நாகதோஷம் ஜாதகத்தில் இருந்தால், அது அந்த ஜாதகக்காரருக்கு ஒரு விதமான தீமையை செய்யும். ஆகையால் நாக தோஷம் உங்களுக்கு இருந்தால், சிவன் கோயில்களுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரத்தை செய்யலாம்
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்