வீட்டில் நாய் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள்? தோஷங்களுக்கு தீர்வு உண்டா? ஜோதிடர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வீட்டில் நாய் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள்? தோஷங்களுக்கு தீர்வு உண்டா? ஜோதிடர் விளக்கம்!

வீட்டில் நாய் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள்? தோஷங்களுக்கு தீர்வு உண்டா? ஜோதிடர் விளக்கம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 04, 2025 10:57 AM IST

காலபைரவர் நிர்வாண கோலத்தில் இருப்பதால், அவரை வீட்டில் வைத்து வழிபட முடியாது. அதிக நிர்வாண கோலத்தை பார்த்தால், ஆயுள் குறையும் என்பது ஐதீகம். அதனால் தான், அவருடைய அம்சமாக, அவருடைய வாகனமாக இருக்கும் நாய்கள் வீட்டிலும், தெருவிலும் இருக்கிறது.

வீட்டில் நாய் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள்? தோஷங்களுக்கு தீர்வு உண்டா? ஜோதிடர் விளக்கம்!
வீட்டில் நாய் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள்? தோஷங்களுக்கு தீர்வு உண்டா? ஜோதிடர் விளக்கம்!

இது போன்ற போட்டோக்கள்

‘‘நாய் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்மை நெருங்கும் தீயவற்றை நாய்கள் மீட்கும். வீட்டில் யாருக்காவது, ஏதாவது ஒரு குறை ஜோதிடத்தில் இருக்கும். அதே போல, வாஸ்து குறை இல்லாத வீடே இருக்காது. அந்த குறைகளை தீர்ப்பதற்கு நாய்கள் வளர்ப்பு மிக முக்கியம். கால பைரவ அம்சத்திற்கு உரியவை நாய்கள். காலபுருஷன் எட்டாம் பாகத்தில் இருக்கும் , செவ்வாய், ராகு, சனி அமைப்பில் உள்ள சூரியனின் தன்மையில் இருக்கும்.

காலபைரவர் எப்படி உருவாகினார் என்றால், பிரம்மஹத்தி தோஷத்தை எடுத்தவர். காலபைரவர் நிர்வாண கோலத்தில் இருப்பதால், அவரை வீட்டில் வைத்து வழிபட முடியாது. அதிக நிர்வாண கோலத்தை பார்த்தால், ஆயுள் குறையும் என்பது ஐதீகம். அதனால் தான், அவருடைய அம்சமாக, அவருடைய வாகனமாக இருக்கும் நாய்கள் வீட்டிலும், தெருவிலும் இருக்கிறது. அவை இருக்கும் இடங்கள் மிகவும் பவுர்புல் ஆனவை.

பாம்பு வந்தாலும், திருடன் வந்தாலும் குறைத்து காட்டிவிடும். இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை. கண்ணுக்கு தெரியாத பலவற்றை அது கண்டுபிடிக்கும். அது நமக்கு தெரியாது. காலபைரவர் எங்கு அதிகம் வசிக்கிறாரோ, அங்கு அன்னபூரணி வாசம் செய்வாள். அன்னபூரணி இருந்தால் லட்சுமிதேவி இருப்பாள். நாய்கள் இருக்கும் வீட்டில் லட்சுமிதாய் திடீர் அதிர்ஷ்டத்தை கொடுப்பாள் என்பது ஐதீகம்.

முன்பு நாய்களை தெருக்களில் வைத்திருப்பார்கள். இப்போது படுக்கையில் வைத்து வளர்க்கிறோம். பணக்கார வீட்டு நாய் என்று நாய்களை குறிப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில், அந்த நாய் இருப்பதால் தான், அந்த வீடு பணக்கார வீடாக இருக்கும். வீட்டில் நாய் உருவத்தில் இருக்கும் பைரவரை குளிப்பாட்டி, உணவு அளித்து வந்தால், அதுவே பெரிய வழிபாடு. தோஷங்கள் நீங்கும்.

என்னை பாதுகாக்குறாங்க, இந்த குடும்பத்துக்கு எதுவும் நடக்க கூடாது, எது வந்தாலும் எனக்கு முதலில் கொடு என்று நாய் வேண்டும் என்பதும், அதனால் அந்த குடும்பத்திற்கு வரும் பிரச்னையை மரணத்தை நாய் எடுத்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. வெளியில் வளர்ப்பதற்கு கருப்பு நாய்கள் மிகவும் வலிமையானது. பெண் நாய்களை பெரும்பாலானவர்கள் வளர்ப்பதில்லை.

பெண் நாய்கள் அதிகம் வளர்க்க வேண்டும். அது வீட்டு பெண்களுக்கு பெரிய சக்தியை தரும். பெண் நாய் குட்டி போட்டு, வீட்டில் இருக்கும் போது, அது மகாலட்சுமி அம்சமாக இருக்கும். ஆண் நாய்கள் எதிரிகளை காக்கும், பெண் நாய்கள் செல்வங்களை தக்க வைக்கும். நாய்கள் தான், மனிதனுக்கு வேட்டையாட உதவியது. உணவு அளித்தது. கருப்பு நாய் ரொம்ப வலிமையானது. அவற்றை வளர்ப்பது பல வகைகளிலும் பாதுகாக்கும்.

திசைகளின் பிரச்னைகளை தீர்க்க தான் விலங்குகள்

வீட்டில் விலங்குகள் வளர்ப்பதை சிலர் விரும்புவதில்லை. ஆனால், அவை பலன் தரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. மாடு, ஆடு, நாய், பூனை, பறவைகள் வளர்ப்பது எல்லாம் முன்பிருந்தே நம் முன்னோர் கடைபிடித்து வந்தவை. விலங்குகள் ராகு தோஷங்களை நீக்கும். தென் மேற்கு பகுதியை ராகு குறிக்கும். அதனால், நாய்கள் தென் மேற்கு பகுதியை ஒத்து இருக்கும். தென் கிழக்கு மூலையில் அக்னியின் வெப்பத்தை குறித்தும் இடம். அந்த இடத்தில் ஆடு, கோழிகள் இருக்கும். பசு வளர்ப்பவர்கள் வீட்டில் தண்ணீர் தொட்டி இருக்கும். நீர் நிலை செழிப்பாக இருக்கும் இடத்தில் பசு இருக்கும். வடகிழக்கு பிரச்னைகள் அதனால் ஓய்ந்து விடும். திசைகளை வைத்து, அதன் பிரச்னைகளை தீர்க்க தான் விலங்குகள் அந்த காலத்தில் வளர்க்கப்பட்டன,’’ என்று ஜெயந்தி ரவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முழுமையாக உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இவற்றைப் பின்பற்றுவதற்கு முன்பு, தொடர்புடைய துறையின் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.