Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Oct 13, 2024 05:36 PM IST

Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!

Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!
Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை குறையும். ஆனால் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு செல்வீர்கள். உணவுப் பழக்க வழக்கங்களில் கவனமாக இருங்கள். உடல்நலக் கோளாறுகள் வரலாம். பழைய நண்பரின் உதவியால் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பேச்சு வார்த்தைகளில் பொறுமையாக இருங்கள். செலவுகள் அதிகரிக்கும். ஆடை முதலிய பரிசுகளைப் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மனதில் ஏமாற்றம் மற்றும் அதிருப்தி உணர்வுகள் இருக்கும். தன்னம்பிக்கை குறையும் வாரம் இது. படிப்பில் ஆர்வம் இருக்கும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சொத்துக்கள் விரிவடையும்.  உங்கள் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். போட்டித் தேர்வுகள் முடிவுகள் உங்களுக்கு சாதகம் ஆகும். அலுவலகத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். சில சமயங்களில் நம்பிக்கை குறைவு வரலாம் என்பதால் பொறுமையாகவும், அமைதியாகவும் இருங்கள். நண்பர்களின் உதவியுடன் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். சேமித்து வைத்த பணம் குறையும். எழுத்து, பேச்சு போன்ற அறிவுசார் துறையில் இருப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். ஆடைகளுக்கான செலவு அதிகரிக்கும். வேலையில் அதிக வேலைகளை செய்ய வேண்டி வரலாம்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் மனதில் குழப்பம் இருக்கும். வியாபாரத்தில் சலசலப்பு அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நண்பரின் உதவியால் வியாபாரம் பெருகும். லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். பேச்சில் கடுமை இருக்கும் என்பதால் நிதானம் தேவை. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பணவரவும் கூடும் என்பதால் சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்னேற்ற பாதை அமையும். திரண்ட செல்வம் பெருக வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும், வாகன வசதி அதிகரிக்கும். இடம் மாற்றம் சாத்தியமாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டிய வாரம் இது. சுயக்கட்டுப்பாடு உடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய காலகட்டம். சிலருக்கு கல்விப் பணிகளில் இடையூறு ஏற்படலாம். நண்பரின் உதவியால் வியாபாரம் விரிவடைந்து லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் கடின உழைப்பு இருக்கும். வருமானத்தில் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். சிலர் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மனம் கலங்கிக்கொண்டே இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருங்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாப வாய்ப்புகளும் அமையும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு பேச்சில் இனிமை உண்டாகும். வாழ்கையில் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது முக்கியம். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் இருக்கலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். தொழிலுக்காக உங்கள் தந்தையிடம் பணம் பெறலாம். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள், தன்னம்பிக்கை குறையும். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒரு பெரியவரால் பணப் பலன் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner