Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Jan 19, 2025 02:49 PM IST

Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலான வாரராசி பலன்கள் இதோ!

Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!
Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். ஆனால் பொறுமையை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். பேச்சில் கவனமும் பொறுமையும் அவசியம். நண்பர்கள் உடன் மனம் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் நம்பிக்கை குறைவு இருக்கும். மன உறுதி உடன் செயல்படுவீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மனதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். இனம்புரியாத பயத்தால் சில கவலைகள் உண்டாகும். பொறுமை உடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பழைய வீட்டை சீரமைக்க முயற்சி எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு இருக்கும். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கும். ஜனவரி 21ஆம் தேதிக்கு பிறகு மனதில் குழப்பம் இருக்கும். பொறுமையை கடைப்பிடியுங்கள். பேச்சில் பொறுமை அவசியம். கல்வி பணியால் மரியாதையும், மதிப்பும் உயரும். 

கும்பம் 

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான முன்னேற்றம் கொண்டதாக இருக்கும். முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். இருப்பினும் மனதில் ஏற்ற தாழ்வுகள் உண்டாகும். தந்தையின் உடல் நிலை மேம்படும். 

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். கலை மற்றும் இசை மீதான ஆர்வமும் கூடும். குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு செல்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் செயல்பாடுகளுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner