Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Dec 08, 2024 06:40 PM IST

Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் டிசம்பர் 09ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!

Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!
Weekly Horoscope: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். முழு நம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். முழு நம்பிக்கையுடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். சில அறியப்படாத பயத்தாலும் நீங்கள் கவலைப்படலாம். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மேம்படும். பழைய நண்பர்கள் உடன் சந்திப்பு உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும். சில சொத்துக்கள் மூலம் பணம் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களின் மனம் கலங்காமல் இருக்கும். மனதில் கெட்ட எண்ணங்களைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கை கஷ்டமாக இருக்கும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். பேச்சில் நிதானமும், பொறுமையும் அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் குறையும். ஆனால் முழு நம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். படிக்கும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். பொறுமையாக செயல்பட வேண்டிய வாரம் இது. வியாபாரத்தில் சில மந்தநிலைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் அதிக உழைப்பை போட வேண்டி இருக்கும். செயல்பாடுகளில் பொறுமையை கடைபிடிக்கவும். தொழில் நிலை மேம்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாகன வசதி கூடும். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு.

மகரம்

மகரம் ராசிக்காரர்களின் மனம் கலங்காமல் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய வாரம் இது. தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் ஆலயங்களில் வழிபாடு செய்வீர்கள். அதிகப்படியான செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் கூடும். விபாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிகப்படியான கோபத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு கட்டுவது குறித்து திட்டமிடுவீர்கள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் இருக்கும். வாரத் தொடக்கத்தில் நம்பிக்கை குறையும். குடும்பம் மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருமானத்தை பெருக்கும் வழிகளில் ஈடுபடுவீர்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சிலருக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்படும். வருமானமும் மேம்படும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். பொறுமையாக இருப்பது முக்கியம். உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் வாழ்கையில் முன்னேற்ற பாதை அமையும். செல்வம் பெருக வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்துடன் சுமுகமான உறவைப் பேணுங்கள். வேலை நேர்காணல் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner