Weekly Horoscope: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் சோதனையா? சாதனையா? வார ராசிபலன்கள்!
Weekly Horoscope: மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு வரும் டிசம்பர் 09ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!
Weekly Horoscope: மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு வரும் டிசம்பர் 09ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை குறையும் வாரம். சில விஷயங்களை நினைத்து உங்கள் மனம் கலங்கும். குடும்ப வாழ்க்கை வேதனை தரும். சிலருக்கு பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் அதிகப்படியான செலவுகள் ஏற்படும். பேச்சில் இனிமை இருக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். பயணங்கள் அதிகமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை உடன் செயல்படுவீர்கள். மன அமைதியை பேண முயற்சி செய்யுங்கள். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனப் பராமரிப்பு, ஆடைகளுக்கான செலவுகள் அதிகரிக்கும். சில செயல்பாடுங்கள் உங்களுக்கு எரிச்சலை தரலாம். வேலையில் அதிக உழைப்பை போட வேண்டி இருக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் கூடும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையின்மை சில நேரங்களில் பிரச்னையை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வியாபாரத்தில் விழிப்புடன் இருங்கள். பணியிடத்தில் சலசலப்பு கூடும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு கூடும். பேச்சில் நிதானமும், கனிவும் தேவை. மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள். சிலர் உயர்கல்விக்காக குடும்பத்தை விட்டு வெளியே செல்லலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனம் கிடைக்கலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சில் இனிமை இருக்கும். சிலருக்கு மன சங்கடங்கள் உருவாகலாம். பேச்சிலும், செயலிலும் பொறுமை அவசியம். சிலர் நண்பரின் உதவியால் தொழில் தொடங்கலாம். பணியிடங்களில் கடினமாக உழைப்பீர்கள். சில நேரங்களில் கோபமும், மகிழ்ச்சியும் வந்து செல்லும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். உங்கள் தந்தையிடம் இருந்து வியாபாரத்திற்காகப் பணம் பெறலாம். சிலர் புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனம் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். பொறுமையாக இருங்கள். வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் ஆர்வம் கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலை மற்றும் இசையில் ஆர்வம் இருக்கும். தந்தை வழியில் அனுகூலம் கிடைக்கும். ஆனால் பேச்சில் கவனம் தேவை. சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கவனமாக செயல்படவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். வீட்டில் வருமானமும் செலவுகளும் கூடும் வாரம் இது. அரசாங்க வழியில் இருந்து அனுகூலம் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். அரசுப் பணிகளில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.