தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: புதிய வாய்ப்புகள், லாபம் உண்டு..! பூரம் நட்சத்தினர் குருபெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2024: புதிய வாய்ப்புகள், லாபம் உண்டு..! பூரம் நட்சத்தினர் குருபெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 19, 2024 11:55 PM IST

பூரம் நட்சத்திரம் நான்கு பாதங்கள் சிம்ம ராசியில் இருந்து வரும் நிலையில், எதிர்வரும் குரு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரனருக்கு கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பூரம் நட்சத்திரம் குருபெயர்ச்சி பலன்கள் 2024
பூரம் நட்சத்திரம் குருபெயர்ச்சி பலன்கள் 2024

குரு பெயர்ச்சியால் பூரம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

பூரம் நட்சத்திரம் சுக்கிர பகவான் ஆதிக்கத்தை பெற்றவர்களாக உள்ளார்கள். குரு பகவான் சாதகமாக இருப்பார் என்பதால் புகழ், செல்வம், செல்வாக்கும், மதிப்பு அதிகமாகும். அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாகும்.

பொருளதார நிலைகளை பெறுத்தவரை பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. வருமானம் போதிய அளவில் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் உதவிகள் கிடைக்கும்

படிப்பில் பிரச்னை எதுவும் ஏற்படாது. போட்ட தேர்வில் எழுதியவர்கள் வெற்றியை பெற வாய்ப்பு உண்டு. உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. விவசாயம் சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் உண்டு.

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கலாம். கலைதுறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். பதவி உயர்வும் கிடைக்கும்.

கண் சார்ந்த பிரச்னைகள், முழங்காலுக்கு கீழ் பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீரக தொடர்பான நோய் பாதிப்புகளும் ஏற்படலாம் எனவே உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை. மருத்து சிகிச்சைகளை தள்ளி போடாமல் உடனடியாக மேற்கொள்ளுங்கள்.

நட்பால் ஆதாயம் ஏற்படும். உடன்பிறப்புகளால் செலவுகள் வரும். சுப காரியங்கள் நிகழும் சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தையின் ஆலோசனை நல்வழிப்படுத்தும்.

தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளை கணவன் - மனைவி ஆகியோர் ஆலோசித்து எடுத்தபது நற்பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

இடம் சார்ந்த, வங்கி சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நீங்கி ஆதாயத்தை பெறுவீர்கள். மனரீதியாக தைரியத்தை பெறுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வரன்கள் அமையும். குழந்தை செல்வத்தை எதிர்பார்க்கும் தம்பதிகளுக்கும் குழந்தைபேறு கிடைக்கும்.

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு இருந்து வந்த அழுத்தங்கள் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் அமையும்.

குரு பெயர்ச்சி காலகட்டத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. சித்தர்கள் ஜீவ சமாதிகள் வழிபாடு, நவகிரகங்களில் குரு பகவான் வழிபாடு,தக்‌ஷிணாமூர்த்தி, பிரம்மா வழிபாடு வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் ஏற்படும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்