Wealth Horoscope: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ மத்திம வயதில் தனம் சேர்க்கும் யோகம் யாருக்கு?
5ஆம் வீட்டில் இருந்து 9ஆம் வீட்டிற்குள் ஏதேனும் ஒரு வீட்டில் வலுவுடன் இருந்தால் மத்திம வயதில் தனம் சேரும் யோகம் உண்டாகும். இவர்களுக்கு மத்திம வயதில் சிறந்த வேலை, சிறந்த தொழில், குழந்தை பிறந்த பிறகு தொடர் வெற்றிகளை அடைதல், பொருளாதர முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

35 வயது முதல் 55 வயதுக்குரிய பருவம் மத்திம வயது எனப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் தனாதிபதி என்று சொல்லப்படும் 2ஆம் அதிபதியும், லாபாதிபதி என்று சொல்லப்படும் 11ஆம் அதிபதியும் இணைந்து 5ஆம் வீட்டில் இருந்து 9ஆம் வீட்டிற்குள் ஏதேனும் ஒரு வீட்டில் வலுவுடன் இருந்தால் மத்திம வயதில் தனம் சேரும் யோகம் உண்டாகும். இவர்களுக்கு மத்திம வயதில் சிறந்த வேலை, சிறந்த தொழில், குழந்தை பிறந்த பிறகு தொடர் வெற்றிகளை அடைதல், பொருளாதர முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
லக்ன ரீதியிலான பலன்கள்:-
மேஷம் லக்ன ஜாதகத்திற்கு 2க்கு உடைய சுக்கிரன் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய சனி பகவான் 7ஆம் வீட்டில் இணைந்து இருந்தால் மிகச்சிறந்த யோகம் உண்டாக்கும்.
ரிஷபம் லக்னத்திற்கு புதன் மற்றும் குரு இணைந்து 5, 8 ஆகிய வீடுகளில் இருந்தால் மத்திம வயதில் பொருள் ஈட்டலாம்.
மிதுனம் லக்னத்திற்கு சந்திரன் மற்றும் செவ்வாய் இணைந்து 7ஆம் வீட்டில் இருந்தால் மத்திம வயதில் பொருள் ஈட்டலாம்.
கடகம் லக்னத்திற்கு சூரியன், சுக்கிரன் ஆகியோர் மகரம், கடகம் ராசியில் இருப்பது நன்மைகளை கொடுக்கும்.
சிம்மம் லக்னத்திற்கு 2 மற்றும் 11ஆம் அதிபதியாக புதன் பகவானே உள்ளார். 5, 6, 7 ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் மத்திம வயதில் தனம் சேர்க்கும் யோகம் உண்டாகும்.
கன்னி லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் 5, 7, 9 ஆகிய இடங்களில் இருந்தால் மத்திம வயதில் தனம் சேர்க்கும் யோகம் உண்டாகும்.
துலாம் லக்னத்திற்கு சூரியன், செவ்வாய் ஆகியோர் 5, 7 ஆகிய இடங்களில் இருந்தால் மத்திம வயதில் தனம் சேர்க்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு குரு மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் 5, 7, 9 ஆகிய இடங்களில் இருந்தால் மத்திம வயதில் தனம் சேர்க்கும் யோகம் உண்டாகும்.
தனுசு லக்னத்திற்கு சனி, சுக்கிரன் ஆகியோர் 6, 7 ஆகிய இடங்களில் இருந்தால் மத்திம வயதில் தனம் சேர்க்கும் யோகம் உண்டாகும்.
மகரம் லக்னத்திற்கு சனி, செவ்வாய் ஆகியோர் 5 ஆம் இடத்தில் இருந்தால் நன்மைகளை தரும். செவ்வாய், சனி ஆகியோர் தனித்தனியே வலுப்பெறுவதுதான் நன்மைகளை கொண்டு வரும்.
கும்பம் லக்னத்திற்கு 2 மற்றும் 11ஆம் இடத்திற்கு உரியவர் குரு பகவான் ஆவார். இவர் 6, 7, 9 ஆம் இடங்களில் இருப்பது மத்திம வயதில் தனம் சேர்க்கும் நிலையை உண்டாக்கும்.
மீனம் லக்னத்திற்கு சனி, செவ்வாய் கிரகங்கள் தனித்தனியே வலுப்பெறுவதுதான் யோகம் ஆகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
